உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் -38

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்

275 சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு

280. புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி "அளியன் தானே முதுவாய் இரவலன்

285 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்” தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்

-

-

-

(கு - ரை) 250. காண்தக - காணுமாறு; 251.கண்டுழி : காணும்போது; அமர்ந்து - மலர்ந்து; ஏத்தி - வாழ்த்தி; 252. பரவி- புகழ்ந்து; 253. சிமையம் -உச்சி; 254. ஐவர் - ஐம்பூதங்கள் ; ஒருவன்: தீ; அங்கை - உள்ளங்கை; 255. அறுவர் -கார்த்திகைப் பெண்கள் அறுவர்; அருந்ததி ஒழிந்த அறுவர் எனவும் கூறுவர்; பயந்த பெற்ற; ஆறுஅமர் -ஆறு உருவாக அமைந்த; 256. ஆல்கெழு - கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்த; மால்வரை பெரிய மலை உமையம்மை; மாற்றார் (இமயமலை). 257. மலைமகள் பகைவர்; 258. கொற்றவை - வெற்றித் தெய்வம்; 259. இழை அணிகலம்; பழையோள் - காளி; 260. தானை - படை; 262. செரு - போர் ; ஒருவ -ஒப்பற்றவனே; மள்ள - இளைய; 263. வெறுக்கை - செல்வம்; சொல்மலை -புகழ்மலை; 264. மங்கையர் தெய்வ யானையும், வள்ளியும்; ஏறு - சிங்கம்; 266. குன்றம் குருகு என்னும் பெயருடைய கிரௌஞ்சம்; குன்றா - குறையாத; 267. மரபு - முறைமை; 270. நசையுநர் விரும்பியவர்; ஆர்த்தும் நுகர்தற்கு அருளும்; 271. அலந்தோர் - துன்புற்றோர்; பொலம் பூண் -பொன்னணிகலம்; 272. மண்டமர் - நெருங்கிய போர்; அகலம் - மார்பு; 274. இயவுள் - கடவுள்; 275. சூர் - சூரபன்மன்; மதவலி - பெருவலி, பெயருமாம்; 276. குருசில் - தலைவன்; 277. ஆனாது - முடியாது; 278. மன்உயிர் - நிலைபெற்ற உயிர், மக்களுயிர்; 279. உள்ளி - நினைத்து; 280. புரையுநர்-ஒப்பானவர்;

-

-

-