உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

27

அளந்தறிதல் நிலைபெற்ற உயிர்களுக்கு இயலாதது. ஆதலால் நின் திருவடியைப் பெற நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பானவர் இல்லாத அறிவாளனே என்று நீ கருதிவந்ததை வேண்டிக் கொள்ளுமுன்னரே, பல்வேறு வடிவுடைய குறுகிய பல பணியாளர் விழாக்கொள்ளும் இடத்தில் பொலிவாகத் தோன்றி,"இம் முதிய இரவலன் இரங்கத் தக்கவன்; நின் வளமான புகழை விரும்பி வந்துள்ளான்; கேட்டோர்க்கு இன்பமும் உறுதியும் தரக் கூடியவையாகிய பலவற்றையும் வாழ்த்தி" என்று கூறுவர். (250 - 286)

250 ஆண்டாண் டாயினும் ஆகக் காண்டக முத்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

255 அறுவர் பயந்த ஆறமர் செல்வ

ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி

260 வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ

செருவில் ஒருவ பொருவிறல் மள்ள

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே

265 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக

270 நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்