உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம்-38

(உ டை) யான் முன்னே சொல்லிய டங்களில் ஆயினும் ஆக மற்றை இடங்களில் ஆயினும் ஆக; காணும் தகுதியுடன் நீ அப்பெருமானைக் கண்முன் காணும்போது முகத்தால் விரும்பி நோக்குக; வாயால் வாழ்த்துக; கையைத் தலைமேல் வைத்துக் கூப்பிப் புகழ்க; அவன் திருவடிகளில் நின் தலைப்படியுமாறு வீழ்ந்து வணங்குக.

"நெடிய பெரிய இமயமலையின் உச்சியில் பளிக்குப் போன்ற நீர் நிறைந்த வளமான பொய்கையில் வான், வளி,தீ,நீர், நிலம் என்னும் ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய தீ தன் கைகளிலே தாங்கக் கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே. கல்லாலின் கீழ் அமர்ந்த கடவுளின் புதல்வனே, பெரிய மூங்கிலையுடைய இமவான் மகளாகிய உமையம்மையின் மகனே, பகைவர்க்குக் கூற்றுவனே, போரில் பெறும் வெற்றியையுடைய கொற்றவையாகிய போர்த் தெய்வத்தின் மகனே? அணிகலம் அணிந்த சிறப்புடைய காளியின் குழந்தையே, தேவர்கள் வணங்கும் விற்படைத் தலைவனே, கடம்புமாலை அணிந்த மார்பனே, எல்லா நூல்களையும் அறிந்த புலவனே, போர்த் தொழிலில் ஒப்பற்றவனே, போர் செய்யும் வெற்றிப்பேறுடைய இளைஞனே, அந்தணர்களுக்குச் செல்வ மாக அமைந்தவனே, அறிவாளர் புகழ்ந்து சொல்லும் புகழ் மலையாகத் திகழ்பவனே, தெய்வயானைக்கும் வள்ளியம்மைக்கும் கணவனே, ஆடவருள் அரியேறு போன்றவனே, வேலைத் தாங்கிய பெருமையுடைய நிறை பெருஞ் செல்வனே, குருகு (கிரௌஞ்சம்) என்னும் பெயருடைய மலையைப் பிளந்து அழித்த குறையாத வெற்றியை யுடைய வானளாவும் நெடிய மலைகளுக்கு உரிமையாளனே பலரும் புகழ்ந்து கூறும் நன்மொழித் திறம்வாய்ந்த புலவர் தலைவனே, அரிதிற் பெறும் முறைமையுடைய பெருமை வாய்ந்த முருகனே, விரும்பியவர்க்கு அவர் விரும்பியதை அளிக்கும் பெரும் புகழாளனே, இன்னலுற்று வந்தவர்க்கு அருள் செய்யும் அழகிய அணிகலம் அணிந்த சேயோனே, நெருங்கிய போரில் வெற்றிபெற்று விளங்கும் ஒளி மிக்க மார்பால், பரிசு வேண்டி வந்தாரைத் தழுவி வேண்டுவன அருளும் ஒளியமைந்த உயர்ந்த வண்மையாளனே, மேம்பட்டா ரெல்லாம் வாழ்த்தும் புகழ்வாய்ந்த பெயரையுடைய இறைவனே, சூரபன்மனைச் சார்ந்தோரையெல்லாம் அழித்த வலிமைய மைந்த பெரு வல்லாளனே, போர்த்தொழில் வல்ல வீரனே, தலைவனே, என்று பலவற்றையும் யான் அறிந்த அளவில் புகழ்ந்து முடியாமல் நின் தன்மைகளையெல்லாம் முற்ற

/