உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

25

(உ-டை) மேலும், முழங்கும் அருவி ஒலியுடன், இனிய இசைக்கருவிகளும் இணைந்து ஒலிக்கும்; சிவந்த மலர்களைத் தூவுவர்; கண்டார்க்கு அச்சம் உண்டாகக் குருதி கலந்த சிவந்த தினையைப் பரப்புவர்; குறக்குடிப் பிறந்த பெண்மகள் முருகன் விரும்பும் இன்னிசைக் கருவிகளை ஒலிக்கச் செய்வள்; இறைவன் உண்மையை மறுப்பாரும் அஞ்சுமாறு முருகன் வெளிப்பட்டுத் தோன்ற வழிப்படுத்துவர்; இத்தகைய அச்சம் பொருந்திய பெரிய நகரில் வெறியெடுக்கும் களங்களின் ஆரவாரம் பெருகும்; அதற்கு ஏற்பப் பாடியும், ஊது கொம்புகள் பலவற்றை நன்றாக ஊதியும் வளைந்த மணியை அசைத்தும் புறங்காட்டாத வலிமை மிக்கதும் பிணிமுகம் என்னும் பெயருடையதும் ஆகிய யானையை வாழ்த்தியும் வேண்டுவார் வேண்டுவனவற்றை எல்லாம் விரும்பிப் பெறுமாறு வழிபடுவர்; மேற்கூறிய அவ்வவ் விடங்களிலெல்லாம் முருகன் தங்குதல் உரியன என்பது யான் அறிந்த வழியேயாம். (240-249)

240. இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்

245. ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த ஆறே.

-

-

(கு - ரை) 240. இமிழ் இசை முழங்கும் ஒலி; இன்னியம் கறங்க - இனிய இசைக்கருவி ஒலிக்க; 241. உருவம் - நிறம்; தூஉய் தூவி; வெருவர - அச்சமுண்டாக; 243. முருகியம் - முருகன் விரும்பும் இசைக்கருவி; முரணினர்-மாறுபட்டோர்; உட்க அஞ்ச; 244. முருகாற்றுப்படுத்த முருகனை வெளிப்படுத்திய ; வியனகர் - பெரிய நகர்; 245. சிலம்ப -ஒலியெழ; 246. கோடு கொம்பு; கொடுமணி வளைந்த மணி; 247. ஓடாப்பூட்கை புறங்காட்டாத வலிமை; பிணிமுகம் - பெயர்; 249. ஆண்டாண்டு அங்கங்கு; ஆறுவழி.

-