உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம்

38

வெண்பொரி சிதறி, மிகுந்த வலிமை வாய்ந்த பெரிய காலை யுடைய கொழுத்த ஆட்டுக்கிடாவின் இரத்தத்துடன் பிசைந்த தூய வெள்ளை அரிசியைச் சிறுபலியாக இட்டுப் பலவகைப் படையல்களையும் படைப்பர்.

சிறிய பச்சை மஞ்சளுடன் நறுமணம் வாய்ந்த சந்தனக் குழம்பைத் தெளிப்பர்; பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலை யினையும் மற்றும் குளிர்ந்த நறுமணமாலைகளையும் இணை இணையாக அறுத்துத் தாழ அசையுமாறு தொங்கவிடுவர்; செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்கள். (பசியும் பிணியும் பகையும் நீங்கி) வாழ்க என்று வாழ்த்துவர்; நறுமணப் புகை எடுப்பர்; குறிஞ்சிப்பண் - பாடுவர்.(227-239)

மாண்தலைக் கொடியொடும் மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி

230. முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்

235. சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையுற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

-

-

-

(கு - ரை) 227. அமைவர மண்ணி அமைவுறச் செய்து; 228. ஐயவி சிறுகடுகு; ஐது உரைத்து - மெல்லெனச் சொல்லி; 229. குடந்தம் வழிபாடு; 230. முரண்கொள் உரு மாறுபட்ட நிறம்; 232. மதவலி -மிகுந்த வலிமை; மாத்தாள் -பெரிய கால்; கொழுவிடை -கொழுத்த கிடாய்; 234. சில்பலி சிறுபலி; பல்பிரப்பு இரீஇ பலவகைப் படையல்களை வைத்து; இதனை, மரக்காலில் அரிசியை இட்டுப் பரப்பி வைத்தல் என்பர்; 235 நறுவிரை -நறிய சந்தனக் குழம்பு. 236. கண வீரம் - செவ்வலரி; 237. துணையுற அறுத்து - இணை இணையாக அளந்து அறுத்து; நாற்றி - தொங்கவிட்டு; 238. நளிமலை - குளிர்ந்த மலை; சிலம்பு மலை; 239. நறும்புகை -மணப்புகை;

-