உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

23

பக்கமாக நிறுத்தி ஊர்தோறும் ஊர்தோறும் எடுக்கப்பட்ட சிறப்புடைய விழாக்களிலும் முருகன் எழுந்தருள்வான்; அன்றியும் அன்புடையார் கூடி வாழ்த்தும் விரும்பத்தக்க இடங்களிலும் தோன்றுவான்; மேலும், வெறியாடுபவன் நடத்தும் வெறியாடும் களங்களிலும், காட்டிலும், சோலையிலும், அழகிய ஆற்றின் நடுவே அமைந்த திட்டுகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் வேறுபல அமைந்த இடங்களிலும், நாற்சந்திகளிலும், முச்சந்தி முதலிய சந்திகளிலும், புதிய பூக்களையுடைய கடம்பமர நிழலிலும், ஊர்ப் பொதுமன்றங்களிலும் அம்பலங்களிலும், தூண் வடிவாக வழிபாட்டுக்கு நிறுத்தப்பட்ட இடங்களிலும் திருமுருகன் எழுந்தருள்வான். (218226)

அதாஅன்று,

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

220. ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறியயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

225. சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

-

(கு - ரை) 278. விரைஇ - கலந்து; மறி ஆட்டுக்குட்டி; 219. வாரணம் கோழி; வயின் - பக்கம்; நிறீஇ - நிறுத்தி; 221. ஆர்வலர் - அன்பர்; மேவருநிலை - விரும்பத்தக்க இடம்; 222. தைஇய அமைத்த; வெறியயர்களன் - வெறியாட்டு நடத்தும் இடம். 223. காசோலை; துருத்தி - ஆற்றிடைக்குறை; 224. வைப்பு - இடம். 225. சதுக்கம் - நாற்சந்தி; சந்தி -முச்சந்தி முதலியன; 226. பொதியில் - பொது மன்றம்; கந்து - கட்டுத்தறி, தூண்.

(உடை) இன்னும், பெருமைமிக்க தலைமையமைந்த கோழிக் கொடி எடுத்து அமைவுறச் செய்து, நெய்யும் வெண் சிறுகடுகும் நெற்றியில் அப்பி, ஓதும் மந்திரத்தை மெல்லென ஓதி வழிபட்டு அழகிய மலர்களை அடியார் தூவுவர்.

அவர்கள் வெவ்வேறான நிறமுடைய இரண்டு உடைகளை உடுத்துக்கொண்டு, சிவந்தநூலால் கையில் காப்புக் கட்டி,