உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் -38

செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ

205. மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் 210. தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன்

215. முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே;

(கு - ரை) 198. உளர்ப்பு - அசைப்பு; கான்

-

-

-

-

-

LOGOOT LD; 199.

குண்டு சுனை - ஆழ்ந்த சுனை; 200. கோதை - மாலை; அணைத்த - சேர்த்துக் கட்டிய ; 201. குல்லை கஞ்சங் குல்லைப்புல்; 202. மராஅம் கடம்பு; வால் இணர் வெண்ணிறப் பூங்கொத்து; 203. சுரும்பு வண்டு; 204. காழ் வடம்; 206. அரை -அடிமரம்; 207.செயலை அசோகு; 208. செச்சை - வெட்சி; 209. கோட்டன் ஊது கொம்பினையுடையவன்; பல் இயத்தன் பல இசைக் கருவிகளை இசைப்பவன்; 210. தகர் - கிடாய்; மஞ்ஞை - மயில்; புகரில் -குற்றமில்லாத; 212 நரம்பு யாழ்; ஆர்த்தன்ன இசைத்தாற்போன்ற; 213. குறும்பொறி அரைக்கச்சை (உதரபந்தனம்); 214. மருங்கு - இடுப்பு: 215. முழவு உறழ் - மத்தளம் போன்ற; 216. பிணை பெண்மான் போலும் மகளிர்; தலைத்தந்து இருக்கை தந்து.

-

அதுவன்றியும் கேட்பாயாக:

-

6. பழமுதிர் சோலை

-

(உ டை) சிறிய தினை அரிசியைப் பூக்களொடு கலந்து வைத்து, ஆட்டுக்குட்டியைப் பலியிட்டுக் கோழிக் கொடியைப்