உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

21

நெடிய மூங்கில்; தேக்கள் தேறல் - இனியகள் தெளிவு; 197. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை; குரவை அயர குரவைக் கூத்துஆட.

-

(உ டை) விரல் படுதலால் மலர்ந்த, வேறுபட்ட நறு மணத்தையுடைய ஆழ்ந்த சுனையில் பூத்த மலரால் புனையப் பட்டதும் வண்டுகள் விரும்புவதும் ஆகிய கண்ணியையும், இணைத்துக் கட்டப்பட்ட பிணையல் மாலையையும், சேர்த்துக் கட்டப்பட்ட கூந்தலையும் உடையவர் மலைநாட்டு மகளிர். அவர்கள் இலையை உச்சியில் அணிந்த கஞ்சங்குல்லையையும், இலையொடு கூடிய நறும்பூங்கொத்துகளையும், சிவந்த அடியைக் கொண்ட கடம்பின் வெண்ணிறப் பூங்கொத்துகளையும் இடை இடை இட்டு வைத்து வண்டு தேனுண்ணுமாறு தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையுடைய வேலைப்பாடுடைய மணிக்கோவைகளை அணிந்த அரையில் அசையும்படி உடுத்துவர்; மயிலைக் கண்டாற் போன்ற மெல்லிய நடையினராக விளங்குவர்; இத்தகைய மகளிரோடும் இணைந்து விளங்குவன் முருகன்.

அவன், ஆங்கெல்லாம் சிவந்த மேனியனாகவும், சிவந்த உடையினனாகவும், சிவந்த அடியைக் கொண்ட அசோகின் குளிர்ந்த தளிர் அசையும் செவிகளை உடையவனாகவும், கச்சை கட்டியவனாகவும், வீரக்கழல் அணிந்தவனாகவும், வெட்சி மாலை சூடியவனாகவும், குழலூதுபவனாகவும், கொம்பு ஊது பவனாகவும், சிறிய பல இசைக்கருவிகளை இசைப்பவனாகவும், கிடாய் ஊர்தியினனாகவும், நெடியனாகவும், வளையணிந்த தோளினனாகவும், யாழ் இசைத்தாற் போன்ற இனிய மொழிபேசும் மகளிர்கூட்டத்தொடு, சிறிய அரைக்கச்சை மேற்கொண்ட நறுமையான குளிர்ந்த அழகிய இடுப்பில், கட்டி நிலந்தொட அமைந்த ஆடையினனாகவும், முழவு போன்ற பெருமையுடைய கைகளால் பொருந்தத் தாங்கி மெல்லிய தோளையுடைய பெண்மான் போலும் மகளிர் பலரைத் தழுவிக் கொண்டு அவர்களுக்குத் தக்க இருக்கை தந்து மலைகள்தோறும் சென்றுவிளையாடுவன். இஃது அவன் இயல்பாகும்.(198-217)

விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி

200 இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்