உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

-

அந்தணர் நுவல கூற; 183. மூன்று புரி நுண்ஞாண் - மூன்று புரிகளைக்கொண்ட நுண்ணிய நூல்வட்டம்; 184. காழகம் உடை; உடீஇ -உடுத்தி;185. தன் - முருகன்; ஆறெழுத்து சரவணபவ': 187. நாஇயல் மருங்கில் நாக்குப் பெயர்ந் தொலிக்கும் அளவில்; 188. விரை மணம்; 189. ஏரகம் திருவேரகம்.

<

அதுவன்றியும் கேட்பாயாக:

(உ

5. குன்றுதோறாடல்

டை) வெறியாடுபவன், பச்சிலைக் கொடியால் நறுமணமுள்ள சாதிக்காயை இடையே இட்டுத் தொடுத்து, அழகிய தக்கோலக் காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்டாளியையும் இணைத்துக் கட்டிய கண்ணியை உடையவன்; அவன், நறுமணச் சந்தனம் பூசிய அழகிய மார்பினையுடைய வரும், வளைதலைக் கொண்ட வலிய வில்லால் கொலை புரிதலைச் செய்பவரும் ஆகிய வேடர், நெடிய மூங்கிலில் இருந்து முதிர்ந்த தேனாற் செய்த கள்ளின் தெளிவை மலைநாட்டுச் சிற்றூரில் உள்ள தம் உறவினருடன் உண்டு மகிழ்ந்து மலை நிலத்துக்குரிய தொண்டகப் பறையின் தாளத்துக்குத் தக்கவாறு குரவைக்கூத்து ஆடுமிடத்துக் கலந்திருப்பான். (190-197)

அதாஅன்று

190. பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்

195. நீடமை விளைந்த தேக்கள் தேறல்

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர

-

(கு - ரை) 190. நறைக்காய் -சாதிக்காய் ; 191. அம்பொதிப் புட்டில் அழகினையுடைய தக்கோலக்காய்; அது புட்டில் போன்றது. ஆதலின் அப்பெயர் பெற்றது; குளவி - காட்டு மல்லியை ; 192. வெண்கூதாளம் -வெண்டாளி; 193. சாந்து சந்தனம்; கேழ்கிளர் - நிறம் விளங்கும்; 194. கொடுந்தொழில வளைத்தல்; கொலைஇய - கொலைபுரியும்; 195. நீடு அமை

-