உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

திருமுருகாற்றுப்படை

19

ஒழுக்கங்களிலே செலவிட்டவர்; அறநெறியில் பயின்ற கொள்கையர்; நாற்கோணம் முக்கோணம் வில் என மூன்று வகைப்படுத்தப்பட்ட வேள்விக்குண்டங்களில் வளர்க்கும் காட்டுத்தீ, வீட்டுத்தீ, ஞானத்தீ என்னும் மூவகைத் தீ வழிபாடு செய்யும் சிறப்பினர்; உடற் பிறப்பு, அறிவுப் பிறப்பு என்னும் இருபிறப்புமுடைய அந்தணர்; இத்தகையவர், ஓதத்தக்க பொழு தறிந்து மறைகளை ஓதுவர். அவர்கள், ஒன்பது இழைகொண்ட மூன்று நுண்ணிய பூணூலையுடையவர்; நீரில் மூழ்கி ஈர ஆடை உடலில் கிடந்து உலருமாறு உடுத்தவர்; தலைமேல் கூப்பிய கையினர்; றைவனைப் புகழ்ந்து 'சரவணபவ' என்னும் ஆறு எழுத்துகளைக் கொண்ட அருமறை மொழியை ஆசிரியரிடம் கேட்டவாறே நாக்குப் புடைபெயர்ந் தொலிக்கும் அளவும் சிறக்கப்பாடுபவர்; மணமிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடுபவர்; இத்தகையவர்க்காகப் பெரிதும் மகிழ்ந்து திருஏரகத்தில் தங்குதலும் உரியன். (177 -189)

அதாஅன்று,

இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு

180. ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ

185. உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத் துறைதலும் உரியன்;

-

(கு - ரை) 177. இருமூன்றெய்திய இயல்பு ஆறுவகையாக வகுக்கப்பட்ட முறைமை; அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன; 178. இருவர் - தாய் தந்தையர்; 179. அறுநான்கு இரட்டி நாற்பத்தெட்டு; 180. ஆறு

ஒழுங்குமுறை; கழிப்பிய

-

கழித்த; 182. இருபிறப்பாளர் -