உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் 38

வலியினராகவும், தீ உண்டாகும்படி இடி இடித்தாற் போன்ற குரலினை உடையவராகவும் தங்களுக்குள்ள குறைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டித் தம்மைக் குறையிரத்தற்காக விண் வழியாகச் சூழ்ந்து வந்து உடனே காணுமாறு, குற்றமற்ற கற்புடைய தேவயானையுடன் சிலநாள் திருவாவிநன்குடியில் தங்குதலும் உரியன். (166-176)

சாா

காண்வரப்

பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர்; மீன்சேர்பு

170. வளிகிளர்ந் தன்ன செலவினர்; வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர்; தீப்பட உருமிடித் தன்ன குரலினர்; விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

175. தாவில் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி நன்குடி அசைதலும் உரியன்.

(கு - ரை) 166. பகலில் - பகுத்துக் காணுதலில்; இகல் இல் - மாறுபாடு இல்லாத; 167. பதினொரு மூவர் - முப்பத்து மூவர்; 168. ஒன்பதிற்று இரட்டி - பதினெண்மர்; 169. தோன்றலர் தோற்றத்தினர்; 170. வளி - காற்று; 171. திறல் - வலிமை; 172. உரும் இடி; விழுமிய - துயரமாயுள்ள; 174. கொட்பு -சுழற்சி, சூழ்ந்து; 175. தாஇல் குற்றமில்லாத; 176. ஆவிநன்குடி திருவாவிநன்குடி ; அசைதல் - தங்குதல்.

-

அதுவன்றியும் கேட்பாயாக:

(உ

-

4. திருவேரகம்

-

டை) ஆறு வகையாக வகுக்கப்பட்ட கடமை முறைகளில் சிறிதும் தவறாதவர்; தாய் தந்தையர் என்னும் இருவர் வழிமுறைகளும் மதிக்கப் பெற்றவர்; பல்வேறு பழைமையான குடிகளில் பிறந்தவர்; நாற்பத்து எட்டு ஆண்டு எனப்பெறும் நல்ல இளமைக் காலத்தையெல்லாம் கல்வியறிவு