உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்; 155. நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்; 160. நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி 165. நான்முக ஒருவற் சுட்டிக்

17

(கு - ரை) 148. கடு - நஞ்சு; ஒடுங்கிய - மறைந்த ;தூம்பு - உட்டுளை; வாலெயிறு - வெண்ணிறப் பல்; 150. புடைக்கும் அடிக்கும்; கொடுஞ்சிறை - வளைந்த சிறகு; 152. வயின் - இடம்; 154.எயில் -மதில்; அவை, தங்கம் வெள்ளி இரும்பு என்பன; முரண் - வலிமை; 155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டம் -ஆயிரம் கண்; 156. கொற்றம் - வெற்றிப் பெருமை; 157. மருப்பு தந்தம்; 159. பிடர்; 160. நாற்பெரும் தெய்வம் எருத்தம்

-

-

-

நான்முகன், திருமால், உருத்திரன், இந்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வம்; 161. ஒன்றுபுரி கொள்கை - காக்கவேண்டும் என்னும் ஒன்றை விரும்பிய நோக்கம்; 162. மூவர் - நான்முகன் ஒழிந்த மூவர்; 163. ஏமுறு ஞாலம் - பாதுகாப்புடைய உலகம்; 164. தாமரை பயந்த - திருமாலின் உந்தித் தாமரை பெற்ற; தாஇல் அழிவில்லாத; 165. சுட்டி - குறித்து.

அவர்களும்,

-

அழகுண்டாகப் பகுத்துக் காணுங்கால் வேறுபடத் தோன்றியும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய ஆதித்தர்,உருத்திரர், வசுக்கள், மருத்துவர் என்னும் நான்காகிய இயல்பினையுடைய வேறுபட்ட முப்பத்து மூவரும், பதினெண் வகைத் தேவகணத்தினரும், விண்மீன் போன்ற தோற்றம் உடைய வர்களாகவும், கடலில் இருந்து கிளம்பும் காற்றுப் போன்றே விரைந்த செலவினராகவும், காற்றொடு கூடி எழுந்த தீப்போன்ற