உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

கடுக்கும் - பொன்னைத் தேய்த்தது போன்ற; திதலை - தேமல்; 146. பருமம் - மேகலை; பணிந்து ஏந்து - தாழ்ந்து உயர்ந்து;

(உ டை) மேலும், நஞ்சுடன் தங்கிய துளையுடைய வெண்ணிறப் பல்லையும், தீயெனப் பெருமூச்சுவிட்டுக் கண்டார்க்கு அச்சம் உண்டாக்கத்தக்க கடுங்கோபத்தையும் உடைய பாம்பு அழிந்துபடுமாறு அடிக்கும், பல வரிகளையும், வளைந்த சிறகுகளையும் உடைய கருடனை அழகிய நெடிய கொடியாகக் கொண்ட திருமால்,

வெண்ணிறக் காளையை வெற்றிக்களத்தில் உயர்த்திப் பிடித்த, பலரும் புகழும் வலிய தோளையும், உமையம்மை விரும்பி விளங்கும் பக்கத்தையும், இமைத்தல் இல்லாத மூன்று கண்களையும் உடைய, பகைவர் மும்மதில்களையும் அழித்த வலிமை வாய்ந்த சிவபெருமான்,

ஆயிரம் கண்களையும், நூறாகிய பல வேள்விகளைச் செய்து முடித்த வெற்றியால் கொண்ட பெருமையையும் உடையவனாய், உயர்ந்த நான்கு தந்தங்களைக் கொண்டதும், அழகிய நடையினதும், நிலந்தொடத் தாழ்ந்து வளைந்த நெடுங்கையை உடையதுமாகிய வெள்ளையானையின் பிடரில் ஏறி இருந்து அழகுடன் உலா வருபவனாகிய இந்திரன், (ஆகிய மூவரும் ஆய்ந்தனர்.) பின்னர், நான்முகன், திருமால், உருத்திரன், இந்திரன் என்னும் நான்கு பெருந்தெய்வங்களின் பொறுப்பிலுள்ள நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள உலகத்தைக் காத்தல் தொழில் ஒன்றையே விரும்பும் கொள்கையுடைய பலராலும் புகழப்படும் நான்முகனை ஒழிந்த மற்றை மூவரும், தம் தம் தொழில்களை முன்னே போல இயற்றித் தலைவராதலை விரும்பினர்; பாதுகாப்பான இவ்வுலகில் வந்து தோன்றினர்; திருமாலின் திருவுந்தித் தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய நான்முகனாகிய ஒருவனைப் பழைய நிலையிலே படைப்புத் தொழிலில் நிறுத்தக் கருதினர். (148-165)

கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்

150. பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும்; வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்