உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

15

(கு - ரை) 126. சீரை தைஇய - மரவுரி உடுத்த; 127. வலம்புரி புரையும் -சங்குபோன்ற; வால்நரை - தூபநரை; 128. இமைக்கும் - விளங்கும்; உரிவை - தோல்; 129. ஊன்கெடு - தசைமெலிந்த; 130. என்பு - எலும்பு; யாக்கையர் - உடலினர்; 131. இகல் - மாறுபாடு; 132. செற்றம் - கோபம்; 134. வரம்பு - எல்லை; 135. காட்சியர் அறிவினர்; 136. மேவர - பொருந்த; 137. துனி -வெறுப்பு;

(உ

டை) புகையை அள்ளிக் கொண்டாற்போன்ற அழுக்கில்லாத தூயஉடையும், மொக்கு விரிந்த மலரால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மார்பும், செவியால் அளவிட்டு அமைத்துச் செம்மையான அளவில் கட்டிய வார்க்கட்டுடைய நல்ல யாழில் பயின்ற நல்ல நெஞ்சும், மெல்லிய மொழியையே மொழியும் இயல்பும் படைத்த கந்தருவர் இனிய யாழ் நரம்பை மீட்டுவர்;

நோயில்லாத நல்ல உடலினரும், மாவின் விளங்கும் தளிர் போன்ற நிறத்தினரும், விளங்கும் பொழுதெல்லாம் பொன் உரைத்தால் போல விளங்கும் தேமலினரும், இனிய ஒளியமைந்த பதினெண் கோவையாகிய மேகலையை அணிந்து உயர்ந்து தாழ்ந்த அரையினரும் ஆகிய குற்றமில்லாத கந்தருவமகளிர் அக் கந்தருவருடன் பொலிவாக விளங்குவர். (138-147)

புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்

140. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின்

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

145. பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்

பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்

மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்

ன்

(கு-ரை) 139. முகை - மொட்டு; வாய் அவிழ்ந்த மலர்ந்த; தகை மாலை; ஆகம் - மார்பு; 140. செவிநேர்பு -செவியால் அளந்து; திவவு - வார்க்கட்டு; 142. மேவலர் விருப்பினர்; இன் நரம்பு உளர - இனிய யாழை இசைக்க; 144 புரையும் போன்ற; அவிர்தொறும் - விளங்கும் பொழுதுதொறும்; 145. பொன்னுரை

-