உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஞரல

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

வெண்சங்கம் ஒலிக்க; 122. பொறி - புள்ளி, தோகை; மஞ்ஞை - மயில்; 123. ஆறுஆக -வழியாக; முன்னி - நினைத்து; - 124. விழுச்சீர் - சிறந்த பெருமை; 125. அலைவாய் - திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர்; சேறல் - செல்லுதல்; நிலைஇய - நிலைத்த

அதுவன்றியும் கேட்பாயாக:

3. திருவாவிநன்குடி

(உ டை) மரவுரியைச் சேர்த்துத் தைத்த உடையினர்; அழகொடுவலம்புரிச் சங்கு போன்ற தூய நரைமுடியினர்; மாசின்றி விளங்கும் வடிவினர்; மான்தோல் போர்வையினர்; தசைமெலிந்து மேலே எலும்பு எழுப்பி உலாவும் உடலினர்; நல்ல பல பகற் பொழுதுகளை விலக்கி, அரிதாக உண்பவர்; மாறுபாட்டுடன் சினமும் நீங்கிய மனத்தினர்; கற்கவேண்டும் நூல்களையெல்லாம் கற்றவராலும் அறியப்பெறாத அறிவினர்; கற்றவர்களுக்குத் தாமே எல்லையாக அமைந்த தலைமையினர்; ஆசையும் கடுங்கோபமும் அகற்றிய நல்லறிவினர்; துன்பம் என்பது சிறிதும் அறியாத தன்மையர்; எவரொடும் பொருந்திய வெறுப்பில்லாத மெய்யுணர்வினர்; இத்தகைய முனிவர்கள் விரும்பி முன்னே செல்லுவர். (126-137)

அதா அன்று,

யஉ

சீரை தைஇய உடுக்கையர்; சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர்; மாசற இமைக்கும் உருவினர்; மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் 130. என்பெழுந் தியங்கும் யாக்கையர்; நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்; இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்; காமமொடு

135. கடுஞ்சினம் கடிந்த காட்சியர்: இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர் முன்புகப்