உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

115. பாடின் படுமணி இரட்ட ஒருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒருகை,

வானர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்கப்,

பன்னிரு கையும் பாற்பட இயற்றி.

-

-

-

13

(கு - ரை) 103. நவின்றுஒழுகல் - தொடர்ந்துசெய்தல்; 104. ஆரம் - மாலை; பகட்டு மார்பு பெரிய (அகன்ற) மார்பு; 105 பொறி -வரி; வாங்கிய - வளைந்த ; சுடர்விடுபு - சுடர்விட்டு; 106. வசிந்து வாங்கு - ஏவி வாங்கும்; 107. ஐயர் - முனிவர், தேவருமாம்; 108. உக்கம் இடுப்பு; 109. கலிங்கம் உடை; குறங்கு தொடை, அசைஇய - தங்கிய; 110. ஐஇரு - அழகிய பெரிய; 111. வட்டம் கேடயம்; எஃகு - வேல்; 114 கொட்ப - சுழல; 115. பாடின் பருமணி - இனிதாக ஒலிக்கும் பெரியமணி; இரட்ட -ஒலிப்பிக்க, 116. நீனிறம் - நீல நிறம்; 117. வதுவை மணமாலை; 118. பாற்பட -தம் பகுதிக்குத்தக.

ரு

(உடை) இவ்வாறு பன்னிரு கைகளும் தம்தம் தொழில் களைச் செய்யவும், வானத்தில் பல இசைக் கருவிகளும் ஒலிக்கவும், வலிய வயிரம்கொண்ட ஊது கொம்புகள் ஓங்கி ஒலிக்கவும், வெண்சங்கங்கள் முழங்கவும், வலிமைவாய்ந்த இடிபோன்ற முரசங்கள் ஆர்க்கவும், வண்ணத் தோகைகளையுடைய மயில் வெற்றிக்கொடி மேல் இருந்து கூவவும், வானமே வழியாக விரைந்து செல்லுதலைக்கருதி உயர்ந்தோரால் புகழப்பட்ட மிகவும் சிறந்த பெருமை வாய்ந்த திருச்செந்தில் மாநகரில் எழுந்தருளு தலும் திருமுருகனின் நிலைத்த தன்மையே யாம்.(119-125)

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்

120. வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பா றாக விரைசெலல் முன்னி

உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்

125. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே;

(கு - ரை) 116. பல்லியம் - பலஇசைக் கருவிகள்; கறங்க - ஒலிக்க; காழ் - வயிரம்; 120. வயிர் - ஊதுகொம்பு; வால்வளை