உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம்-38

அக்கைகளுள் ஒருகை, வானில் செல்லும் முறைமையுடைய முனிவர்க்குப் பாதுகாவலாக அமையும்; அதற்கு இணையான ஒருகை, இடுப்பில் இருக்கும்;

ஒருகை, நன்மையமைந்த செந்நிற உடையுடுத்த துடையின் மேல் வைக்கப்பெற்றிருக்கும்; அதற்கு இணையான ஒருகை, தோட்டி என்னும் அங்குசத்தை எடுத்து யானையைச் செலுத்தும்; டி

இரண்டுகைகள், அழகிய பெரிய கேடயத்துடன், வேற்படையை வலமாகச் சுழற்றும்;

ஒருகை, மார்பின்மேல் பொருந்தியிருந்து மெய்ப்பொருள் உணர்த்தும்; அதற்கு இணையான ஒருகை மார்பில் புரளும் மாலையைப் பற்றியிருக்கும்;

ஒருகை, கிழித்து எடுக்கப்பெற்ற விரும்பத்தக்க வளைய லோடு சுழலும்; அதற்கு இ ணையான ஒருகை இனிமையாக ஒலிக்கும் பெரிய மணியை அறையும்;

ஒருகை நீலநிறவானில் நிறைந்த மழையைப் பொழியச் செய்யும்; அதற்கு இணையான ஒருகை, வானுலகிலுள்ள தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்டும்; இவ்வாறு அப்பன்னிரு கைகளும் தம்தம் முகங்களுக்குத் தக்க தொழில்களைச் செய்யும். (103-178)

ஆங்கம்,

மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்

105. செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய

தொருகை; உக்கம் சேர்த்திய தொருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை,

110. அங்குசம் கடாவ ஒருகை; இருகை

ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப;

ஒருகை, மார்பொடு விளங்க;

ஒருகை, தாரொடு பொலிய; ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;

ஒருகை,