உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

11

ஒருமுகம், இயல்பாகச் செல்லும் நடுவு நிலைமையைக் கெடுத்து இவர்களைக் கொல்லவேண்டும் என்று சினங்கொண்ட உள்ளத்தோடு அழித்தற்குரிய பகையை அழித்துப் போர்க்கள வேள்வி செய்யும்.

ஒருமுகம், மலைவாணர்தம் இனியமகளும் கொடிபோன்ற இடையுடையவளும் ஆகிய மெல்லியல் வள்ளியொடு மகிழ்வு கூரும். (90 -102)

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே; ஒருமுகம்,

95. மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வியோர்க் கும்மே; ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே; ஒருமுகம்,

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

100. கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே; ஒருமுகம்,

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே;

-

(கு - ரை) 91. மாயிருள் -பேரிருள்; ஞாலம் - உலகம்; 92. ஆர்வலர் -அன்பர்; அமர்ந்து - விரும்பி; 95. வழாஅ -தவறாது; 96. ஓர்க்கும் ஆய்ந்து பார்க்கும்; 97. ஏமுற - இன்புற; நாடி ஆராய்ந்து; 99. செல்சமம் - செல்லும் நடுவுநிலை; 100. கறுவு - சினம்; 101. நுசுப்பு - இடை; 102. மடவரல் - பெண் ; நகை - மகிழ்வு;

(உ -டை) அவ் ஆறுமுகங்களும் அம்முறையில் தம்தம் தொழில்களைத் தொடர்ந்து செம்மையாகச் செய்யும். அம் முகங்களுக்கு ஏற்றவாறு செம்பொன்மாலை அணிந்த அழகிய பெரிய மார்பிலே உயர்ந்த இலக்கணமுடைய சிவந்த மூன்று வரிகள் பொருந்திய தோள்கள் அமைந்துள்ளன; அவை, சுடர் மிக்கன; தம் வலிமையினால் புகழ்வாய்ந்தன; படைக்கலங்களை ஏவிப் பகைவர் மார்புகளைப் பிளந்து மீண்டும் அவற்றை வாங்கி நிமிர்வன;