உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம்-38

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப்

80. படுமணி இரட்டும் மருங்கில் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவில் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85. மின்னுறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90. மனனேர் பெழுதரு வாள்நிற முகனே

-

-

(கு - ரை) 77. அதா அன்று -அதுவன்றி; 78. வைநுதி - கூர்மையான நுனி; பொருத அழுத்திய; வடு ஆழ் தழும்பு ஆழ்ந்த; நுதல் - நெற்றி; 79. ஓடை நெற்றிப்பள்ளம்; துயல்வர - அசைய; 80. 'ஐவேறு..முடி'-தாமம், மகுடம், பதுமம். கிம்புரி, கேடகம் என்னும் ஐந்துவகை வினைத்திறம்; 84. முரண் - ஒன்றை ஒன்று விஞ்சிய; 85. பொற்ப - பொலிவுதர; 86. நகை - ஒளி; துயல் மதி - முழுமதி; கவைஇ சூழ்ந்து; 88. அவிர்வன இமைப்ப விளங்கி ஒளிவிட; 89. தாவுஇல் -அழிவில்லாத; 90. ஏர்பு எழுதரு அழகாக எழும்; வாள் -ஒளி ;

(உ -டை) அத்திருமுகங்களுள் ஒருமுகம், காரிருள் கப்பிக் கொண்ட உலகம் குற்றமின்றி விளங்குமாறு ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலிய பலகதிர்களை விரிக்கும்;

ஒருமுகம் தன்மேல் விருப்புடைய அடியார் வாழ்த்த விரும்பி அமைந்து இனிதுற நடந்து அவர்கள் வேண்டும் வரங்களை அன்பால் வழங்கும்.

ஒருமுகம், மந்திரம் கூறும் மறைநூல்களின் விதிமுறை தவறாத ஒழுக்கமுடைய அந்தணர்கள் செய்யும் வேள்விகளுக்குத் தீமை வாராதபடி பார்க்கும்;

ஒருமுகம், நூலறிவால் காணமுடியாத நுண் பொருள்களை இன்புற ஆராய்ந்து ஒளிநிரம்பிய முழுமதிபோல எல்லாத் திசைகளையும் விளக்கும்.