உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்க்

கந்தர் கலிவெண்பா

உரைநடையும் குறிப்பும்

(உரை நடை) செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், தெளிந்து அறிய முடியாத பாடல்களால் அமைந்த பழமையான மறைகளும், இனிமையமைந்த நாத தத்துவமும், அந்த நாத தத்துவத்தின் முடிவும், குற்றமற்ற உயிர் அறிவும் கண்டறிய முடியாத பேரறிவினது இறை. அது, முதல் நடு இறுதி கடந்தது; நிலைத்த இன்ப அறிவானது; கட்டற்ற பேரொளி யானது; தோன்றிய பெயரும், குணமும், ஒப்பற்ற வடிவும் அற்றது; எங்கும் நிறைந்த பரம்பொருளாயது; உயிர்களின் அறிவுக்கு எட்டாத தொன்மையது; படைப்பு காப்பு, அழிப்பு, அளிப்பு, மறைப்பு என்னும் ஐந்தொழில்களுக்கும் அப்பாலாயது; பழ நாளிலேயே மனம் அறிவு ஆணவம் என்பவற்றுக்கு எட்டாத திருவடிவுடையது.

1. பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு

2. நாதமும்நா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதிநடு 3. அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த

4. குறியும் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்(கு)

5. அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் -

(1-5)