உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

386

இளங்குமரனார் தமிழ்வளம்-38

-

(குறிப்புரை) 1. 'பூமேவு செங்கமல' 'செங்கமலப்பூ மேவு எனப் பொருத்துக. புத்தேள் - கடவுள்; தேற அரிய -தெளிதற்கு அரிய; தே மேவு - இனிமையமைந்த 2. நாதம் ஒலி; (நாத தத்துவம்) நாதாந்தம் - நாத தத்துவத்தின் முடிவு; நவைதீர்ந்த - குற்றமற்ற ;போதம் - அறிவு; போதம், முன்னது உயிர் அறிவு (பசு அறிவு) பின்னது இறை அறிவு (பதி அறிவு) 3. அந்தம் - இறுதி; பந்தம் - கட்டு, தளை; தணந்த அற்ற; பரஞ்சுடர் - பேரொளி, தெய்வ தொன்மை; மனாதி (மனம் ஆதி) மனம் முதலியன; தனாதருளின் தனது அருளின்;

-

.

(உ-டை) இறை, தன் அருளால் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்துருவங் கொண்ட பேரின்பமானது; எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாக நிற்கும் ஒப்பற்ற பொருளானது; குறைவிலா நிறைவாயது; நிலைபேறுடையது; இறப்பு, பிறப்பு, தொடர்பு, காரணம் ஆகியவை இல்லாத நிலைமையது; உலகில் கண்கட்டு வித்தை காட்டுபவன் அவ் வித்தையைக் காண்பாரை மயக்கித், தான் மயங்காது செயல்புரிவதுபோல், முற்பட்ட மூலமின்றித்தானே மூலமாக நிலைத்தது; அருளுருவத்தை அல்லாமல் மருளுருவம் தனக்கு இல்லாதது; மனம் மொழி மெய் என்னும் முக்கருவிகள் வழியாக வரும் விருப்பம் அறிவு செயல்களால், ஒன்றுதலும் நுகர்தலும் விரிதலும் ஆகிய பொருளாகியது;

6. பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத

7. பூரணமாய் நித்தமாய்ப் போக்குவர வும்புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில்

-

8. இந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்திற் சாராது சார்வதுபோல் - முந்தும்

9. கருவின்றி நின்ற கருவாய் அருளே

உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்

10. ஆகவரும் இச்சை அறிவியற்ற லாலிலய போகவதி காரப் பொருளாகி

(6-10)

தனாதருளின்