உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

கந்தர் கலிவெண்பா

-

37

(கு-ரை) 6. பஞ்சவிதம் - ஐந்துவிதம்; பரசுகம் - பேரின்பம்; தஞ்சம் அடைக்கலம்; தனி - ஒப்பற்ற; எஞ்சாத குறையாத; 7. பூரணமாய் நிறைவாய்; நித்தம் -நிலைபேறு; புணர்வு தொடர்பு;கதி -நிலைமை; தாரணி - உலகம். 8. இந்திரசாலம் கண்டுகட்டுவித்தை, செப்படிவித்தை; தந்திரம் -சூழ்ச்சி; 9. அருளே உருவின்றி நின்ற உரு - அருளே உருவாக நின்று, வேறு உரு இல்லாதது; வேறுஉரு மருள் உரு; திரிகரணம் மொழி மெய் என்னும் முக்கருவி; 10. இச்சை - விருப்பம்; இயற்றல் செயல்; இலயம் - ஒன்றுதல்; போகம் -நுகர்தல்; அதிகாரம் - விரிவுறுதல்; ஏகம் -ஒன்று.

-

மனம்

(உ-டை) ஒன்றாகிய இறை, உருவமும் அருவமும் அருவுரு வமும் ஆகியது; பின்னே அடியார் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப வடிவம் பலவாயது; அஃது, அறியாமைக்குக் காரணமாகிய ஆணவமலத்தால் பாசம் கொண்ட பல உயிர்களுக்கும் வீடுபேறு அளித்தற்காக அந்தப் பாசம் நீங்குதற்குத் திருவருள் வைப்பது; உயிர்கள் உடல் எடுத்தற்கு, உருவமும் உருவம் இல்லாததும் ஆகிய தூயமாயை (சுத்தமாயை) அழுக்கு மாயை (அசுத்தமாயை) மூலப்பகுதி (பிரகிருதிமாயை) கட்டு என்பவற்றைச்சேர்ப்பிப்பது; அவ்வுயிர்கள் இயங்குதற்குரிய மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு வழிகளையும் (அத்து வாக்களையும்) உலகத்தமைந்த மற்றை வழிகளையும் பொருந்தத் தக்க பிணைப்பில் கூட்டுவிப்பது; மாறி மாறி வருகின்றதாகிய முட்டையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது, வேர்வையில் தோன்றுவது, வித்து கிழங்கு ஆகியவற்றில் தோன்றுவது என்னும் நான்கு வகைத் தோற்றத்தையும், தாவரம், ஊரி, நீரி, விலங்கு, பறவை, மனிதர், தேவர் என்னும் ஏழுவகைப் பிறப்புக் களையும், எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) பிறவி (யோனி) வேறுபாடுகளையும் நுகராமல் தீர்க்கமுடியாத வினைக்குத் தக்கவகையில், காற்றாடியும் வண்டிச்சக்கரமும் போல் பிறந்து உழலுமாறு மறைப்பிப்பது; கொடிய நரகம் தெய்வவுலகம் முதலியவற்றில் நுகரவேண்டியவற்றை நுகர்விப்பது; அறிவறி தலால் பிறவியொழிக்கும் நல்வினை பெறச்செய்து, ஒன்றை யொன்று எதிரிட்டு உரைக்கும் வேற்றுமைச் சமயங்களின் பழமையான நூல்களைத் தாம்கொண்ட நூல்களே நல்ல நூல்கள் எனத் தோன்றுமாறு செய்விப்பது;

(11-18)

ஏகத்(து)