உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

11. உருவும் அருவும் உருவருவும் ஆகிப்

பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் 12. மோகமுறும் பல்லுயிர்க்கு மூத்தியளித் தற்குமல பாகமுற வேகடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 13. தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்

14. ஆறத்து வாவும்அண்டத் தார்ந்தவத்து வாக்களும்முற் கூறத் தகும்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும் 15. ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய

16. கன்மத்துக் கீடாய்க் கறங்கும் சகடமும்போல் சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய

17. சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்கா ரணம்சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்

18. தொன்னூற் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து

-

-

-

மாசு,

-

-

(கு - ரை) 11. உரு வடிவு; அரு வடிவற்றது; பருவ வடிவம் அடியார் பக்குவநிலைக்கு ஏற்ற வடிவம்; இருள்மலம் அறியாமையை உண்டாக்கும் ஆணவமலம். மலம் அழுக்கு. 12. மோகம் -பற்று, பாசம்; மலபாகம் மலம் நீங்கும் பக்குவநிலை; கடைக்கண் பாலித்தல் - அருள் செய்தல்; தேகம் - உடல். 13. விந்து - சுத்தமாயை; மோகினி -அசுத்தமாயை; மான் மூலப்பகுதி; மூலம் பிரகிருதி மாயை; பெந்தம் (பந்தம்)-கட்டு; மந்த்ரம் -மந்திரம். 14. அத்துவா வழி; அண்டத்து ஆர்ந்த - உலகில் அமைந்த; சிமிழ்ப்பு பிணைப்பு. 15. ஈரிரண்டு தோற்றம் நான்குவகையில் தோன்றும் தோற்றம்; யோனி பிறவி; எண்பான் - எண்பது; தீர்வு அரிய - தீர்க்க முடியாத, 16. கன்மத்துக்கு ஈடாய் வினைக்கு இணையாய்; கறங்கு - காற்றாடி; சகடம் - வண்டி உருளை; சென்மித்து - பிறந்து. திரோதித்து மறைப்பித்து; வெந்நிரயம் - கொடிய நரகம், 17. துய்ப்பித்து - நுகரச்செய்து; நண்ணுதல் கூடுதல்; 18. பரசமயம் - மற்ற சமயம்.

-

-

-

(உ-டை) முன்னைய மெய்ப்பொருள் நூல்களில் கூறியபடி நோன்பு முதலாய பல தவநெறிகளைக் கடைப்பிடியாகக்