உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

39

கொண்டு நின்ற பின்னே, மெய்யான தொண்டு (சரியை) பூசை (கிரியை) ஓகம் (யோகம்) ஆகிய நெறிகளில் சாரும்படி செய்வது, திருவருள் பெருக்கத்திற்குக் காரணமாகிய இறையோடு ஓருலகத் திருத்தல் (சாலோகம்) இறைெேயாடு அடுத்திருத்தல் (சாமீபம்) இறைவடிவாக இருத்தல் (சாரூபம்) ஆகிய பதவிகளை அருள்வது; மெய்ப்பொருள் அறிவை விரிவுபடுத்துவது; நான்கு வகைப் பட்டதாகிய மிகமந்தம், மந்தம், விரைவு, மிகவிரைவு என்னும் அருள் வீழ்ச்சிகளைத் தருவதற்கு நல்வினை தீவினை என்னும் ருவினைகளிலும் ஒத்த வெறுப்புண்டாகும் காலம் உளவாக்குவது; பெரிதாம் மலங்கள் நீங்கும் பக்குவமான காலம் வரும்போது உயிர்கள் நெடுங்காலம் துன்புற்றுத் திரிதலைக் கண்டு அருள்புரிவது; நீங்காத அறிவுக்கு அறிவாகியும், அந்த அறிவுக்கும் எட்டாத வகையில் அமைந்திருந்த நிலைமை நீங்கி நீங்காத பேரருள் பொழியும் திரு வடிவாக உலகில் தோன்றிக் குருபரன் என்னும் அழகிய பெயரைக் கொண்டு விளங்குவது;

- முன்னூல்

19. விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித் - தருள்பெருகு

20. சாலோக சாமீப சாரூப மும்புசிப்பித்(து)

ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்

21. சத்திநி பாதம் தருதற் கிருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த

22. மலபரி பாகம் வருமளவிற் பன்னாள் அலமருதல் கண்ணுற் றருளி - உலவா (து)

23. அறிவுக் கறிவாகி அவ்வறிவுக் கெட்டா நெறியிற் செறிந்தநிலை நீங்கிப் பிறியாக்

24. கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு -

(19-24)

(கு-ரை) 19. சார்வித்து - சாரச்செய்து 20. புசிப்பித்து - அனுபவிக்க (நுகர)ச் செய்து; ஆலோகம் - தெளிந்த அறிவு; விரியச்செய்து. 21. சத்திநிபாதம் அகற்று வித்து

-

அருள் பதிவுநிலை; இருவினை ஒத்தல் - நல்வினை தீவினை என்னும் இருவினைகளிலும் வெறுப்பு ஒப்பாதல்.பெத்த - பெரிய,