உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்-38

பெத்தம் - கட்டுமாம்; 22. மலபரிபாகம் - மலம் அகலும் காலம். பன்னாள் பலநாள்; அலமருதல் - துன்புறுதல்; உலவா ஒழியாத; 23. பிறியா-பிரியா; எதுகை நோக்கி இடையினம் வல்லினம் ஆயது. 24.காசினி உலகம்; காசினிக்கு உலகில்; உருபு

மயக்கம்.

-

(உ-டை) திருவருட்பார்வையால் முன்னை வினையை ஒழித்துவிடுவது; உயிர்களின் புறவுடற்கருவிகள் அறுபதையும், அகவுடற்கருவிகள்எட்டையும், மூலம், கொப்பூழ, நெஞ்சு, கழுத்து, நெற்றி, நடு, தலை, வெளி என்னும் ஏழு நிலைகளையும், மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம், கலை என்னும் (அத்துவாக்கள்) நெறிகள் ஆறையும் பாழாகச் செய்வது; ஆணவ மலம் என்னும் மறைப்புப் படலத்தைக் கிழித்து அறிவினால் காணற்கு அரிதாய மெய்ஞ்ஞானக் கண்ணை அருளுவது கொண்ட இறைவன் திருவடிப்பேற்றை அறியும் மெய்யறிவால் தன்னையும் உயிரையும் காட்டுவது; பின்னர்க் காவலமைந்த உலகம் முழுவதையும் உண்மையறியக் காட்டுவது; எல்லை காணமாட்டாமல் தேக்கிய பேரின்பம் ஆகிய தெளிந்த அமுதாகி எல்லா இடங்களிலும் இடைவெளியறத் தான்நின்ற நிலை காட்டுவது; இறப்பு,பிறப்பு, நினைப்பு,மறப்பு, பகல், இரவு என்பவற்றைக்கடந்து விளங்கும் நீங்காத இன்பத்தைப் பொருந்தச் செய்வது;

திருநோக்கால்

25. ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக

26. ஆணவ மான படலம் கிழித்தறிவிற்

காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

27. அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது

28. தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகியெங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்

29. வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்

இரவும் கடந்துலவா இன்பம் - மருவுவித்துக்

(25-29)

(கு-ரை) 25. நிலம் - இடம்; அவை ஆறாதாரமும் வானமும், 26. ஆணவம் - மும்மலங்களுள் ஒன்று ; படலம் - மறைப்பு; அறிவு