உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

கந்தர் கலிவெண்பா

உயிர்களின் அறிவு; 27. அடிஞானம்

41

இறைவன் அடியை

அடையும் அறிவு. கடிஆர் - காவல் அமைந்த; புவனம் - உலகம்; முடியாது - அழியாது. 28. உலவா இன்பம் - நீங்காத இன்பம். 29. மருவு வித்து பொருந்தச்செய்து.

-

(உ-டை). ஆணவத்துடன் வினைப்பாகம் உடையவர்க்கு, மலர் போன்ற கண் மூன்றும், நீண்டு தொங்கும் சடையும், வலிய மழுப்படையும், மானும்உடையவனாய் வெண்ணிறக் காளையின் மேல் மின்னலை இடமாகக்கொண்ட பவழமலை யொன்று வெள்ளிமலை மேல் தோன்றியதுபோல் அம்மையப்பராம் தெய்வவடிவோடு திகழுவது. அவர்க்கு முன்னை வினைக்கட்டை அறுத்து ஞானம் அருளுவது;

ஆணவமலம் மட்டுமே உடையவர்க்கு, அவர்கள் உள்ளத்தே நின்று இன்பத்தை வழங்குவது; மேலும் மேலும் வரும் உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கியநிலை என்னும் முன்று துயர்களையும் (அவத்தைகளையும்), அகற்றுவது; மும் மலங்களும் நீங்கிய மூத்தருடன் இருக்கச் செய்வது; உயர்ந்த மேம்பட்டமுத்திநிலையையும் அடையச் செய்வது;

(30-33)

30. கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் ... மின்னிடத்துப் 31. பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த

32. கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்று ஒருமலர்த்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு

33. மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருட னேயிருத்தி ஆன்ற பரமுத்தி அடைவித்து -

-

மின்னல்

(கு-ரை) 30. வன்மழு - வலிய மழுவாயுதம்; மால் விடை வெண்ணிறக்காளை; திருமால் ஆகிய காளை. மின் போன்ற உமையம்மை. 31. பொருப்பு மலை; பவளப் பொருப்பு சிவந்த மலைபோன்ற சிவபெருமான்; வெற்பு -மலை; வெள்ளி வெற்பு - கயிலாயம்; 32. கண் ஞானம்; உள்நின்று - புறத்தே புலப்படாமல் உள்ளே நின்று; ஒரு மலத்தார் ஆணவமலம் ஒன்றுமே உடையார். 33. அவத்தை துயர்; முத்தர் - முத்தி பெற்றவர், ஆன்ற அகன்ற.

-

-

-