உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் -38

(உ-டை) இத்தகைய இறைமை அமைந்து, பிறவிக்குக் காரணமாக வரும் 'யான்' என்னும் செருக்கும் (அகங்காரம்) எனது' என்னும் ஆசையும் (மமகாரம்) ஒழிந்த இடமே திருவடியாகவும், மோனத்தால் பெறும் மேலான இன்பமே திருமுடியாகவும், கடவுள் (பதி) ஞானமே திருவுருவாகவும், இச்சை செயல் அறிவு (இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி) என்பவை மூன்று கண்களாகவும், திருவருளே மலர்போன்ற சிவந்த கைகளாகவும், இப் பேருலகமே திருமுன்னிலையாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற சுடரே, எவ்வுயிர்களிலும் கலந்து வேறுபாடற நிற்கும் பெருமானே;

-தோன்றவரும்

34. யானெனதென் றற்ற இடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம்

35. திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே

36. சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; - எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே|

(34-36)

(கு - ரை) 34. மோனம்-மௌனம்; பரஆனந்தம்-மேலான இன்பம்; 35. செங்கை அலர் - சிவந்த கைம்மலர்; இருநிலம் - பெரிய நிலம்; 36. சந்நிதி - திருமுன்; பின்னம் அற - வேறுபாடு நீங்க.

(உ-டை). மின்னலென ஒளிவிடும் வடிவம் கொண்ட ஒன்பான் மணிகள் ஒளிசெய்யுமாறு பசும்பொன்னால் செய்யப் பெற்ற பேரொளி வாய்ந்த அழகிய திருமுடியும், கலைகள் குறைந்த பிறைத்துண்டங்கள் ஆறை, முறையே பதித்து வைத்தாற் போன்ற திருநீற்றுக் கீற்றுகள் இடப்பெற்ற அழகிய நெற்றிகளில், பூப்பூத்தாற்போல விளங்கும் பொட்டுகளின் அழகும், உரிய பொழுதில் மலர்ந்த செந்தாமரை மலர்கள் பன்னிரண்டு ஒருங்கே மலர்ந்தாற்போல விளங்கி அருள்பொழியும் திருவிழி மலர்கள் பன்னிரண்டும், ஞாயிறு பலதோன்றி ஒளிசெய்தாற்போலப் புன்முறுவல் பூத்து விளங்கும் செவ்வல்லி மலர் போன்ற சிவந்த திருவாய்களும், பிறவியாகிய வெப்பைத் தீர்க்கும் குளிர் நிழலாம் திருமொழியும் உடையாய்!

(37-41)

- மின்னுருவம்