உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

37. தோய்ந்தநவ ரத்நச் சுடர்மணியாற் செய்தபைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்

38. துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் - விண்ட 39. பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு) அருள்பொழியும் கண்மலரீ ராறும் - பருதி

40. பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்

41. புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் -

-

43

(கு-ரை) 37. மின் உருவம் -மின்னல் போன்ற உருவம்; கிரணம் - கதிரொளி. தேய்ந்த பிறை-எட்டாம்பிறை (நெற்றிக்கு), மூன்றாம் பிறை (திருநீற்றுக்கு) 38. நிரை - வரிசை; புண்டரம் திருநீறு ; நுதல் - நெற்றி விண்ட - மலர்ந்த, 39. புண்டரிகம் தாமரை ; கண்மலர் கண்களாகிய மலர்; பருதி -கதிரோன், 40.பாலித்தல் வழங்குதல்; குலவும் விளங்கும், அசையும்; மகரக் குழை - சுறாமீன் வடிவில் செய்யப் பெற்ற காதணி, குண்டலம்; 41. பூங்குமுதம் -அழகிய செவ்வல்லி; செவ்வாய் - சிவந்த வாய்; சென்மவிடாய் - பிறவியாகிய வெப்பு; மலி - மிகுந்த

-

(உ-டை). ஒளி பொருந்திய தோளையுடைய அசுரர்கள் போற்றிப் புகழும் கொடிய சூரபன்மனை அழித்துப் பகைவர் உயிரைப் போக்கும் சிவந்த மலர்முகம் ஒன்றும்,

எல்லா உயிர்களுக்கும் அமைந்த பழவினையை ஒழித்து என்றும் அழியாத பேரின்ப வாழ்வை அருளும் சிவந்த தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும்,

அன்பால் நெருங்கும் அடியார்கள் ஆக்கும் பழைய மறை நூல்களையும், ஆகம நூல்களையும் நலமாக முடித்து வைக்கும் தாமரை மலர்போன்ற முகம் ஒன்றும்,

உயிர்களை விலகி அறியாத பாசம் என்னும் இருளை அகற்றிப் பல கதிர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒளி செய்வதுபோல விளங்கும் மணமிக்க தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும்,

விருப்புடன் கூடி இன்புறும் வள்ளியம்மைக்கும், தேவர் கோன் மகளாகிய பூங்கொடி போன்ற தேவயானைக்கும் காதலை வழங்கும் முழுமதி போன்ற முகம் ஒன்றும்,