உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

பெருவேட்கையுடன் வந்து தன் அடியை அடைந்த அடியார் அகமகிழுமாறு வரங்கள் பலவற்றை வழங்கியருளும் தெய்வத் தன்மை வாய்ந்த தாமரை மலர் போன்ற முகம் ஒன்றும் (ஆக ஆறு திருமுகங்களை யுடையாய்) (42-47)

-

வின்மலிதோள்

42. வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்

43. ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்

44. வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்

45. பாச இருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாசமலர்வதன மண்டலமும் - நேசமுடன்

46. போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன்

47. வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும்

-

-

-

(கு - ரை) 42. வெவ் அசுரர் -கொடிய அசுரர்; போற்றி சைக்கும் - போற்றிக் கூறும்; வெஞ்சூரன் - கொடிய அசுரன்; தடிந்து அழித்து; தெவ்வர் - பகைவர். 43. உலவாத பேரின்பம் அழியாத பெரிய இன்பம்; சூழ்வோர் சூழ்ந்திருக்கும் அடியார். 44. வடிக்கும் - இயற்றும்; கமலம் - தாமரை. 45. துரத்து - அகற்றி; வதனம் - முகம்; மண்டலம் வட்டம்; 40.போகம் - இன்ப நுகர்ச்சி; புத்தேளிர் -தேவர்; பூங்கொடி - பூங்கொடி போன்ற தேவயானை; மோகம் -காதல்.

(உ-டை) கொத்து மலர்ந்த தேனெழுகும் கடம்பு மாலையும், மணமிக்க குராமலரும் மலர்ந்து விரிந்த பெரிய தோள்களாகிய மலைகள் பன்னிரண்டும் (உடையாய், நின் பன்னிரு திருக்கை களுள்), ஒரு திருக்கை தேவர்களுக்கு அரிய அமுதத்தை வழங்கும்;

மெல்லிய ஒரு திருக்கை, தெய்வமகளிர் விரும்புதலால் அவர்களை அன்போடு அணைக்கும்;

மலர் போன்ற ஒரு திருக்கை ஒழிவின்றி மழை பொழியும்;