உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

ஒரு திருக்கை, அழகிய மாலையைத் தழுவி அமையும்; ஒரு திருக்கை மார்பின்மேல் வைக்கப்பெற்றிருக்கும்; ஒரு திருக்கை, இடுப்பின் இடப்பாகத்தில் அமையும்; ஒரு திருக்கை, செறிந்த சிறிய வீர கொண்டிருக்கும்;

45

வளைகளைக்

பெருமைக்குரிய ஒரு திருக்கை, மணியை உடையதாக

இருக்கும்;

ஒரு திருக்கை, சினங்கொண்டு செய்யும் போரில் அங்குசப் படையை எடுத்திருக்கும்;

ஓர் அழகிய திருக்கை, அழிக்கும் போரில் பகைவரை அதிரச் செய்யும் கேடகத்தைச் சுழற்றும்;

ஒரு திருக்கை, ஒளிசெய்யும் வாள் வீசும்; (இவ்வாறு நின் பன்னிரு திருக்கைகளும் கடமை புரியும்.)

-

கொந்தவிழ்ந்த

48. வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 49. தேவர்க் குதவும் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 50. மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 51. வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த

52. சிறுதொடிசேர்கையுமணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்

53. அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்

கதிர்வாள் விதிர்க்கும் கரமும் -

(48-53)

(கு-ரை) 48. கொந்து அவிழ்ந்த- கொத்துக்கள் மலர்ந்த; வேரி - தேன்; விரை - மணம்; குரவு-குராமரம்; பாரப்புயசயிலம் - பெரிய தோளாகிய மலை; ஆர் -அரிய. 49.சூர்மகளிர் அச்சமூட்டும் தெய்வமகளிர்; ஓவாது ஒழியாது. 50. மாரி மழை; தொடையல் - மாலை; 51. கரதலம் - கை. வாமமருங்கு

-

-

-

-