உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

-

அழகிய இடுப்பு; குறங்கு துடை; மொய்த்த நெருங்கிய. 52. தொடி வளையல்; கறுவுசமர் - சினங்கொண்டெழுந்த போர்; தெறுபோர் - அழிக்கும் போர். 53. அம்கை -அழகிய கை; விதிர்க்கும் சுழற்றும், வீசும்.

(உ-டை.) இளமையான, குடம்போன்ற மார்புகளையும், சிவந்த வாயையும், கொடிபோலும் இடையையும் உடைய மகளிர் விரும்பித் தழுவிய அழகிய அணிகலங்களை அணிந்து அகன்ற மார்பும், பசும்பொன்னால் அமைந்த பூணூலும், உருத்தி ராக்க மணிமாலையும், பூவேலைப்பாடமைந்த பட்டுடையும் அரைஞாணும் அரைக்கச்சையும் அணிந்த அழகிய அரையும், இனிய ஒலியெழுப்பும் வீரக்கழலும் பொலிவுடைய மணிகள் கோத்த பொற் கிண்கிணியும் சிலம்பும் அணிந்த திருவடிகளும், ஒளிமிக்க இளஞாயிறு நூறாயிரங் கோடி ஒன்றாகி ஒளிசெய்தாற் போன்ற வளமான தெய்வப் பொலிவுடைய திருவடிவமும் (உடையாய்) (54-57)

- முதிராத

54. கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற்

55. புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்

56. நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும் பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி

57. இளம்பருதி நூறா யிரங்கோடி போல

வளந்தருதெய் வீக வடிவும்

(கு-ரை) 54. கும்பம் - குடம்; வேட்டு விரும்பி; 55. புரி நூல் பூணூல்; கண்டிகை உருத்திராக்கம்; திருஅரை -அழகிய இடுப்பு. 56.நாதம் -ஒலி; கழல் -காலில் கட்டப்படும் வீரக்கழல்; நகுமணி -ஒளிவீசும் மாணிக்கம்; பரிபுரம் - சிலம்பு. பருதி கதிரோன்.

(உ-டை.) நின் திருவடியை உள்ளத்தில் கண்டு விருப் புடையவராகிய அன்பர்க்கு, அரிய உயிராக அவர்தம் அன்பான உள்ளத் தாமரைமேல் அமர்ந்திருக்கும் தெய்வ விளக்கொளி யாகத் திகழ்பவனே, புகழ்ந்து கொல்லப்பட்ட அகாரம், உகாரம், மகாரம்,நாதம், விந்து என்னும் ஐந்தும் கூடிய ஓங்காரத்தின்