உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

47

உள்ளொளிக்கும் உள்ளொளியாய் அமைந்த வனே, படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்னும் ஐந்தொழிலும் நீங்காத நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐந்து பேருருவமாக நின்றவனே, தாங்குதற்கு அரிய ஆற்றல் அமைந்த மந்திரமே குருதியாகவும், சிறந்த சொற்களே திருமுடியாகவும், சொல்லுக்குத் தொடர்புடைய எழுத்துக்களே தோலாகவும், பாசத்தால் ஒப்புடைய உலகத்தின் உருவமே உரோமமாகவும், தத்துவங்களே இரதம், செந்நீர், எலும்பு, தோல், றைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழு தாதுக்களாகவும் கலைகளே உறுப்புக்களாகவும் கூறப்பட்ட ஆறு அத்துவாவின் நிலையே வடிவமாகவும் நின்றவனே,

(58-62)

- உளந்தனிற்கண்(டு)

58. ஆதரிப்போர்க் காருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந்(து) 59. ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய

60. மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்

61. ஒத்த புவனத் துருவே உரோமமாத்

-

தத்துவங்க ளேசத்த தாதுவா வைத்த

62. கலையே அவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய்

(கு - ரை). 58. ஆதரிப்போர் -அன்பராவோர்; அகத்தாமரை உள்ளத்தாமரை. 60. சோரி - இரத்தம்; வான்பதம் - சிறந்த சொல்; தொந்தம் - தொடர்பு; வன்னம் - எழுத்து; தொக்கு - தோல்; பந்தனை அமைப்பு, கட்டு. 61. புவனம் உலகம்; சத்ததாது எழுவகைத் தாதுக்கள்; 62. அத்துவா வழி; வடிவமா வடிவமாக; ஆ -ஆக என்பதன் தொகுத்தல்.

-

-

-

(உ-டை) பலகோடி அண்டங்களும் தன் வடிவங்களாகவும், அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் உறுப்புக் களாகவும், இச்சை அறிவு செயல் என்னும் மூன்று சக்திகளும் உட்கருவி (அந்தக்காரணங்)களாகவும் அமைந்து, அடிமை கொண்ட உயிரின் அறிவுக்கு இறையறிவு அளிக்குமாறு ஐந்து