உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

48

இளங்குமரனார் தமிழ்வளம் -38

தொழில்களை ஏவி, ஒப்பற்ற வகையில் நடத்தி வைக்கும் எங்கள் தலைவனே, தான் பொருந்தியதால் வருகின்ற நிலம் நீர் தீ வளி வான் ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எட்டுத் திருமேனிகளுடன் வாழ்பவனே, மெய்யறிவைத் தருகின்ற இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்னும் எண் வகை யோகங்களால் பெறவல்ல தவவடிவே,

(63-65)

-பலகோடி

63. அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசத்திமூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்

64. ஆவிப் புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ

65. வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே.

(கு-ரை) 63. அண்டம் - உலகம்; அங்கம் -உறுப்பு; சரம் - அசையும் பொருள்; அசரம் - அசையாப் பொருள். உட்கரணம் உட்கருவி; தொண்டு - அடிமை. 64. ஆவிப்புலன் - உயிர் அறிவு; கோ தலைவன்; மேவ - பொருந்த. 65. அட்டமூர்த்தம் - எட்டு வடிவம்; அட்டயோகம் -எட்டுவகைத் தவநிலை.

-

(உ-டை) பக்குவநிலை வரும்போது நீங்காத பேரன் புடையோரின் உள்ளத்துள் புகுந்து விளங்குதலாகிய இன்ப மலையும், நலமும் அழகும் வாய்ந்த பேரின்ப வெள்ளப் பெருக்குடைய ஆறும்,

மேலிடமாகிய பரவெளியை ஆராய்தலால் இன்பம் தருவதாகிய அழகிய நாடும்,

உலகிய இன்பம் எல்லாவற்றையும் கடந்த பேரின்பப் பெருநிலத்துள் பிறப்பு இறப்பு இல்லாது உயர்ந்ததாகிய அழகிய நகரும்,

பழைமையான உலகில் முடிவும் முதலும் இன்றி எங்கும் நிறைந்த ஐந்தெழுத்து மந்திரம் கூறி நடாத்தும் குதிரையும்,

மிக்க மதத்தில் (சமயத்தில்) தோய்ந்து மகிழ்ந்தோர் துதிக்கையால் (வணங்குதலால்) ஆணவம், கன்மம், மாயை, மறைப்பு, மாயா உலகம் என்னும் ஐந்து மலங்களையும் அழித்த சிவஞானம் என்னும் யானையும்,