உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

49

நிறைவினுள் நிறைவாகிய சிறந்த அறிவு என்னும் புது மலரை அன்பு என்னும் நார்கொண்டு அடியார்கள் உள்ளத்தில் கட்டப்பெறும் நறுமண மாலையும்,

ஐந்தொழில்களும் நிகழ்தற்குக் காரணத்தை நீங்காமல் அளித்து உயர்த்தப் பெற்ற பெருமைமிக்க கொடியும்,

புதுமையான நாதத்தை (ஒலியை) எழுப்பும் (நாததத்துவம் என்னும்) அழகிய முரசும்,

எக்காலமும் நீங்காமல் கண்ணாடியில் ஒரு பொருளைக் காட்டி அதன் நிழலை அசையச் செய்பவன்போல உலகத்தை எல்லாம் படைத்து இயங்கச் செய்வதாகிய திருவருள்ஆணையும் என்னும் பத்தினையும் இனிமையால் பெருகும் நூல் வல்ல புலவர்கள் தனித்தனியே புகழ்ந்து கூறித் தசாங்கங்களை உடையவன் என்று புகழப்பெற்ற பேரரசே;

- பருவத்(து)

66. அகலாத பேரன் படைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 67. பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் தேரின்பம் நல்கும் திருநாடும் - பாரின்பம்

68. எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லா துயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 69. ஈறும் முதலுமகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்

70. தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ

71. பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா

நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 72. ஐந்தொழிலும் ஓவா தளித்துயர்ந்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும்

73. நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போற்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து

(66-74)