உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

74. வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே

பேசும் தசரங்கமெனப் பெற்றோனே

-

(கு-ரை) 66. பொருப்பு மலை; சுகலளிதம் - இனிய அழகு; 67. மீதானம் - மேலிடம்; நல்கும் - கொடுக்கும்; பார் இன்பம் உலகியல் இன்பம். 68. இருநிலம் - பெருநிலம்; தொல் - பழமை 69. குரகதம் குதிரை. 70. பஞ்சமலம் - ஐவகை மலங்கள்; கடாக் களிறு - மதயானை; 71. பூரணம் -நிறைவு; போதம் - அறிவு; நார் - அன்பு,தொடுக்கும் நார்; தொடை - மாலை. 72. வான்கொடி உயர்ந்த கொடி ; நவநாதம் -புதுமையான நாத தத்துவம்; சந்ததம் - என்றும்; 73. ஆடி கண்ணாடி ; புவனம் -உலகம்; ஆணை திருவருட் சக்தி; தே - இனிமை; 74. பனுவல்-நூல்; விபுதர் புலவர்; தசாங்கம் - அரசர்க்குரிய பத்து உறுப்புக்கள் ; தேசு - ஒளி

-

-

(உ-டை) ஒளி விளங்கும் திருக்கயிலை மலையில், மலர் புனைந்த கூந்தலையுடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு உறையும் முக்கண் பேரொளிப் பிழம்பாகிய சிவ பெருமான் முன்னொரு காலத்தில் கொடிய அசுரர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கினான். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் தன் ஐந்து திருமுகங்களுடன் அதோ முகம் என்னும் ஒரு திருமுகமும் கொண்டான்; சிவந்த நெருப்புப் போன்ற அவ் ஆறு திருமுகங்களில் இருந்தும் ஒரு முகமாக ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன; அப் பொறிகள் விரிந்த உலகம் முழுவதும் பரவின; ஆதலால் தேவர்கள் அஞ்சினர்; கனன்றெழும் அத் தீப்பொறிகளை அழகிய தன் திருக்கையில் எடுத்தான் சிவ பெருமான். காற்றுக் கடவுளை நோக்கி "நீ இவற்றை எடுத்துச் செல்க" என ஏவினான்.

காற்றுக் கடவுள் அந் நெருப்புப் பொறிகளை மெதுவாக எடுத்துக் கொண்டு போனான்; தனக்கு அடுத்தவனான தீக் கடவுளிடம், "இவற்றைக் கொண்டு போ" என ஏவினான். அத் தீக் கடவுள், குளிர்ந்த கங்கைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான். அக் கங்கை ஒரு சிறுபொழுதும் அப்பொறிகளைத் தாங்க இயலாமல் சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அப்பொழுது அந் நெருப்புப் பொறிகள் ஆறும், ஆறு திருவுருவங்கள் ஆயின.

தேசுதிகழ்

(75-81)