உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

75. பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையு முக்கட் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 76. வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோ டதோமுகமும் - தந்து

77. திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் - ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப - விரிபுவனம் 78. எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்

பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் 79. எடுத்தமைத்து வாயுவைக்கொண் “டேகுதி” யென்றெம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 80. "பூதத் தலைவகொடு போதி" எனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்(று}

81. அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய்

51

(கு-ரை) 75. பூங்கோதை - உமையம்மை ; கோதை - கூந்தல்; பாங்கு - பக்கம்; 76. வெம் தகுவர் -கொடிய அசுரர்; முறை முறையீடு; அதோமுகம் -கீழ்நோக்கிய முகம். 77. ஆறு வழி; உய்ப்ப - செலுத்த; 78. அங்கண் - அங்கு, அவ்விடத்து. 79. ஏகுதி - செல்க; எம்மான் - எம் தலைவன், சிவபெருமான்; கொடுபோய் - கொண்டு போய்; 80. அடுத்ததொரு பூதம் காற்றை அடுத்த பூதமாகிய தீ; விண், வளி, தீ, நீர், நிலம் என்பன ஐம்பூத வரிசை முறை. போதி போவாயாக; சீதப்பகீரதி - குளிர்ந்த கங்கை; போது - பொழுது; சற்று - சிறிது; 81. சரவணம் - நாணற்புல் வளர்ந்த குளம் ; சென்னி - தலை, உச்சி;

-

(உ-டை) முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவரிடமும் ஆறுகுழந்தைகளும் பாலுண்டு அழுதும் விளையாடியும் இருந்தனர். அப்பொழுது மணப்பொருந்திய கங்கையைத் திருமுடியில் கொண்ட பெரியோனாம் சிவபெருமான், புன்முறுவல் பூக்கும் உமையம்மையோடும் ஆங்குச் சென்றான். அவளுக்கு, விருப்பமிக்க அவ் ஆறு திருவுருவங்களையும் காட்டினான்; உமையம்மை கண்டு அவ்வாறு திருவுருவங் களையும் தன் இரண்டு கைகளாலும் எடுத்து அணைத்தாள்; கந்தன் எனப் பெயரிட்டாள்; ஆறு திருவுருவங்களும் ஒன்றாகப்