உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

பொருந்தச் செய்தாள்; தன் சிவந்த முகத்தில் அணைத்து உச்சி மோந்தாள்; உள்ளார்ந்த அன்பினோடும் பாலூட்டினாள்; உலகத்தைத்திருவடியால் அளந்த திருமாலாகிய வெண்ணிறக் காளையின்மேல் அமரும் இறைவன் திருக்கையில் அளித்தாள். இவ்வாறு இறைவன் உள்ளம் உவப்புற இருந்த பெரியோனே,

(82-86)

-முன்னர்

82. அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் -குறுமுறுவற்

83. கன்னியொடும் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண் டவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு 84. கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய

85. முகத்தில் அணைத்துச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத் தளித்துச் - சகத்தளந்த

86. வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே

(கு-ரை). 82. அறுமீன் - ஆறுகார்த்திகைப் பெண்களாகிய விண் மீன்கள்; நறுநீர் -கங்கை; குறுமுறுவல் -புன்முறுவல். 83. கன்னி -உமையம்மை. 84. கந்தன் - சேர்க்கப்பட்டவன்; மெய் உடல்; மேவுவித்து பொருந்தச் செய்து; செய்ய - சிவந்த; 85 அகத்துள் - உள்ளத்துள்; மகிழ்பூத்து -மகிழ்ச்சிபெருகி; சகம் உலகம்; 86. விடை காளை; விமலன் - சிவபெருமான்; கிள்ளை கிளி

-

(உ-டை) கிளிபோல் பேசும் உமையம்மையின் திருவடிச் சிலம்பின் மணிகள் ஒன்பதில் தோன்றிய ஒன்பான் சக்திகள் மாணிக்கவல்லி, மௌத்திகவல்லி, புட்பராகவல்லி, கோமேதக வல்லி, வைடூரியவல்லி, வைரவல்லி, மரகதவல்லி, பவளவல்லி, இந்திரநீலவல்லி என்பார். அவர்தம் கருப்பத்துன்பம் தீர்ந்து விருப்பாய்த் தந்த ஒன்பான் வீரர் வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தார், வீரராட்சகர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்போர். இவருள் மூத்தவராகிய மணம் பரவும் மாலையணிந்த வீரவாகுதேவர் நாரதரின் வேள்வித்தீயில் தோன்றி அழகிய இடமகன்ற