உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

53

உலகத்தை எல்லாம் அழித்துத் திரிந்த சிவந்த கண்ணையுடைய ஆட்டுக் கிடாயைப் பற்றி வந்தார். 'எம் கோமானே இதனைச் செலுத்தியருள்க' என்று வேண்டினார். அவ்வாறே அக் கிடாயின் மீதேறி அமர்ந்து எண் திசைகளிலும் நடத்தி விளையாடிய நாதனே.

87. மங்கை சிலம்பின் மணியொன் பதில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்

88. விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்(து)

(87-90)

கிள்ளைமொழி

89. அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந் - தெங்கோன் 90. விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந்தெண் திக்கும் நடத்தி விளையாடும் நாதா

-

(கு-ரை) 87. துங்க மடவார் - சிறந்த மகளிர் (நவசக்திகள்); 88.நவவீரர் ஒன்பது வீரர்; முன்னோன் - முதல்வன்; மருப் பாயும் - மணம் பரவும். தார்-மாலை, 89. அம் கண் புவனம் அழகிய இடமகன்ற உலகம்; செம் கண் கிடாய் சிவந்த கண்ணையுடைய ஆட்டுக் கிடாய்; கொணர்ந்து - கொண்டு வந்து, 90. விடுக்குதி - செலுத்துவாயாக; இவர்ந்து ஏறி; எண் திக்கும், எட்டுத் திசையும்;நாதன் - தலைவன். படைப்போன் - நான்முகன்.

-

(உ -டை). படைத்தல் தொழில்புரியும் நான்முகன் தான் படைப்புத் தொழில்புரிவதால் செருக்கிக் கொண்டு உரைக்க அவனிடம் திருமறையின் முதல் எழுத்தாகிய விரும்பத்தக்க பிரணவ எழுத்தின் உண்மையை வினாவ, அவன் விடை சொல்லாமையால் பிரணவப்பொருள் அறியாமல் நீ படைப்புத் தொழில் செய்வது எவ்வாறு? என்று முன்னாளில் அவன் தலையில் குட்டிச் சிறையிலிட்ட தலைவனே,

தேன் ஒழுகும் பொன்போன்ற கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் குருவாகப் போற்றி வேண்டிக் கொள்ளுதலால் அவனுக்கு முதற்கண் பிரணவ மந்திரப் பொருளை மொழிந்தவனே,

- படைப்போன்

(91-93)