உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

91. அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 92. சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்

93. பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரம மொழிந்தோனே -

-

(கு-ரை) 91. அகந்தை செருக்கு; ஆதி எழுத்து முதல் எழுத்து, உகந்த - விரும்பிய; புகன்றிலையால் - கூறவில்லை எவ்வாறு; ஆதலால், 92. சிட்டி சிருட்டி (படைப்பு); எங்ஙன்

-

-

முனம் - முன்னம்; கோமான் - தலைவன்; மட்டு அவிழும் - தேன் ஒழுகும். 93. பொன் அம் கடுக்கை - பொன் போன்ற நிறமுடைய அழகிய கொன்றை; புரி சடை கற்றைச் சடை; பிரமம் - பிரணவமந்திரம்; கொன் - அச்சம்.

(உ-டை) அஞ்சத்தக்க நெடிய வேலையுடைய தாரகாசுரன் இறக்கவும் பெரிய கிரௌஞ்சமலை பொடியாகவும் வீரமிக்க கூர்மையான வேற்படையை விடுத்தவனே,

அலைகள் தெள்ளிக் கொழிக்கும் அழகிய திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் போய் அருள்வெள்ளம் பெருகியது போல் இருக்கையில் அமர்ந்திருந்து, வெள்ளை யானையை யுடைய இந்திரனுக்கு, “அஞ்சாதே" என்று அடைக்கலம் தந்து, கடலின் இடையே இருந்த சூரபன்மனுக்கரிய வீரமகேந்திர புரத்துள் புகுந்து, தேவர்கள் வாழுமாறு "தேவர்களை வெற்றி கொண்டவனாம் சூரபன்மன் உள்ளக்கருத்தை ஆய்ந்து வருக" என்று வலிய தோளையுடைய வீரவாகுவைத் தூதாக விடுத்தவனே,

அச் சூரபன்மன், தேவர்களைச் சிறையில் இருந்து விடுவித்துத் தன்னை வணங்காமையால், கொடுமையான அவ்வசுரனுடைய யானை குதிரை தேர் காலாள் என்னும் நாற்படைகளையும் அழித்தும்,பானுகோபன் அக்கினிமுகன் இரணியன் வச்சிரபாகு என்னும் மக்களையும், அவன் தம்பியாகிய சிங்க முகனையும் வென்றும் வெற்றி மாலை புனைந்தவனே,

நிலவுலகைச் சூழ்ந்த கடலுள் புதியதொரு மாமரமாய் நின்ற நெடிய சூரபன்மன் உடலைக்கிழித்த ஒளிமிக்க வேற்படையாளியே,