உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

55

சூழ்ச்சிப்போர் வல்ல அச்சூரன் உடல் இரண்டாகப் பிளந்து வலிய மயிலும் சேவலுமாக மாறிச் செருக்குக் கொண்டு ஆரவாரித்து எழுந்து விளங்கவும் அவற்றுள் சீறவல்ல பாம்பைப் போரிட்டு வெல்லும் அழகு மயிலை ஊர்தியாகக் கொண்டு மேலே ஏறிச் செலுத்தும் இளையபெருமானே,

மாற்றுருக் கொண்டுவந்த பகையாகிய சேவல், வலிமைய மைந்த கொடியாக அமைய ஒப்பற்ற வகையில் உயர்த்திப் பிடித்த உயர்ந்தோனே,

மும்மூர்த்திகளின் இடர்களையும் தீர்த்துத் தேவர்களைச் சிறையில் இருந்து விடுவித்து விண்ணில் குடியேற்றி அவர்களை ஆட்கொண்டருளிய தேவனே,

- கொன்னெடுவேல்

94. தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக

வீர வடிவேல் விடுத்தோனே - சீரலைவாய்த்

95. தெள்ளு திரைகொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ள மெனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்

96. கயேந்திரனுக் கஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச்-சயேந்திரனாம் 97. சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 98. வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு

99. பகைவன் முதலாய பாலருடன் சிங்க

முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த

100. வாரிதனிற் புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூருடலம் கீண்ட சுடர்வேலோய் - போரவுணன் 101. அங்கமிரு கூறாய் அடல்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடனார்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்

102. சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு

(94-104)