உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் -38

103. சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர்

104. குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்

சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே

-

-

(கு-ரை) 94. தாரகன் - ஓரசுரன்; மாய-இறக்க; தடம் - பெரிய; சீர் அலைவாய் - சிறந்த அலை மோதும் இடம். 95. தெள்ளுதிரை - மேலெழுந்த அலை; கொழிக்கும் - கரையில் மோதும்; தெள்ளு தலும் கொழித்தலும் புடைத்தல் தொழில்கள். இங்கு அலைக்கு வந்தது; தவிசு இருக்கை; 96. கயேந்திரன் யானை (கயம்+ இந்திரன் யானையரசு; அஞ்சல் - அஞ்சாதே; மயேந்திரம் ஊர்ப்பெயர்; புக்கு - புகுந்தது; சயேந்திரன் - வெற்றி கொண்டவன்; சூரன் - சூரபன்மன்; 97. சோதித்து - தூது விடுத்து ஆராய்ந்து; தடந் தோள் - அகன்ற தோள்; விசயவீரன் - வீரவாகு; காரவுணன் - உடலும் உள்ளமுங் கறுத்த அசுரன்; 98. விட்டு சிறையில் இருந்து விடுவித்து; தானவர் - அசுரர், சங்கரித்து அழித்து, 99. பானு பகைவன் - பானுகோபன்; பாலர் மக்கள், வாகை - வெற்றி; சகம் உடுத்த உலகைச் சூழ்ந்த, 100. வாரி - கடல்; மா - மாமரம்; சூழ்ந்த,100.வாரி சூர் உடலம் - சூரபன்மன் உடல்; கீண்ட கிழித்த; அவுணன் அசுரன். 101. அங்கம் -உடல்; அடல் - வலிமை துங்கம் - சிறப்பு. 192. அரவு - பாம்பு; சித்ரமயில் - அழகிய மயில். 103. திறல் வலிமை; பதாகை - கொடி; மேவ - அமைய, மூவர் - முக்கடவுளர்; 104. குறை - மனக்குறை; விண்ணம் - விண்ணகம் (தொகுத்தல்)

.

-

-

-

(உ-டை) வேதத்தின் முடிந்த முடிவைத் தெரிவிக்கும் சைவக்கொழுந்தே, தவத்தின் கடலே, தேவர்கோன் தந்த திருமகளாம் தெய்வயானையைத் திருமணம் கொண்ட பெருமானே, பொய்யொடு தொடரும் காமம் முதலிய குற்றங்களை வெறுத்த கலைவல்ல சிவமுனிவன் திருவருள் பார்வைமால் அழகிய பெண் மான் வயிற்றில் தோன்றி, பூமணம் பொருந்திய கானக்குறவர்கள் மகிழுமாறு அழகிய குயில்போல் இசைத்துத் தினைப்புனம் காத்து இன்பமாக இருந்து, மேனிலை பெறுமாறு, தெள்ளிப் பாகமாகச் செய்து தினைமாவும் தேனும் அன்போடு அளித்த வள்ளியம்மையை மணங்கொண்டவனே,

மனமகிழ்ந்து திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு திருப்பதிகளையும் (படை வீடுகளையும்) கண்டு நினக்குரிய 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை அன்புடன் கூறும் அடியார்கள் உள்ளம் கோயில் கொண்டவனே,