உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

57

மலர் மணம் பரப்பும் கமுகஞ்சோலை மேலே எழும்பிய கருமுகிலைத் தொட்டு அசைக்கும் திருச்சீரலைவாய்க் கரையமைந்த திருச்செந்தில் மாநகர் காக்கும் செவ்வேள் பெருமானே,

மறை முடிவாம்

105. சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றைமணம் செய்தோனே - பொய்விரவு 106. காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு

107. கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத் தினிதிருந்து - மேன்மைபெறத் 108. தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளமுவந்து 109. ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தைகுடி கொண்டானே - நாறுமலர்க் 110. கந்திப் பொதும்பரெழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வனே

-

(105-110).

கு-ரை) 105. வான் வானம் (தேவர்கோன்). தெய்வக்களிறு- தேவயானை; விரவு -கலந்த. 106. முனிந்த - வெறுத்த; கலை முனிவன் - கலைத் தேர்ச்சியுடைய சிவமுனிவன்; வாம மடமான் அழகிய பெண் மான் ; பூ மருவு -பூக்கள் நிரம்பிய. 107. பூங்குயில்- அழகிய குயில்; ஏனற்புனம் - தினைக்கொல்லை; 108. பரிந்து- விரும்பி; 109 ஆறு திருப்பதி -அறுபடை வீடுகள்; ஆறெழுத்து - சரவணபவ; 110. கந்தி கமுகு; பொதும்பர் -சோலை ; கார் மேகம்; செந்திப்பதி - செந்தில் மாநகர்; புரக்கும் - காக்கும். சந்ததமும் என்றும்

-

(உ-டை.) என்றும் பலவாகப் பெருகும் பிறவிப்பகையும், குறைகாலச் சாக்காடும், பலவாகிய இடையூறுகளும், பலவாகிய நோய்களும் பலவாகிய பாவங்களும், தீயசெய்வினைச் செயல் களும், பாம்பும், பேயும், வலிய பூதமும், தீயும், நீரும், தாக்கும் படைக் கருவிகளும், தீமை நீங்காத கொடிய நஞ்சும், கொடிய விலங்கு முதலாகியவையும் எந்த இடத்தில் எவ்வகையில் வந்து எவ்வாறு எம்மை எதிரிட்டாலும் அவ்விடத்தில் அப்பொழுதில்