உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் -38

நின் நீலமயில் ஊர்தியும், திண்ணிய பன்னிரு தோள்களும், அச்சத்தை ஒழிக்கும் கூர்மையான வேலும், கச்சையணிந்த அழகிய இடுப்பும், சிறிய திருவடிகளும், சிவந்த திருக்கைகளும், அருள்மழை பொழியும் பன்னிரு திருவிழிகளும், பெருமைமிக்க திருமுகங்கள் ஆறும், பேரொளி பொழியுமாறு அணியப்பெற்ற திருமுடிகள் ஆறும், எப்பக்கங்களிலும் முன்வந்து தோன்றி ஏற்பட்ட துன்பங்கள் எல்லாவற்றையும் பொடியாக்கி வேண்டும் வரங்கள் எல்லாவற்றையும் தந்து, உள்ளத்தே புகுந்து, பெருமிதத் தோடு இருந்து,பலவகைப்பட்ட ஆசு, மதுரம், சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைப் பாக்களும் பாடும் திறமையும், எண் வகை நினைவுக்கலைத்திறமும், சிறப்பாகப் பேசப்படும் பெருமை வாய்ந்த பலவகைக் காப்பிய நூல்களும் ஒலி இலக்கணமும், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்து இலக்கணமும் பொருந்தி முதிர்ந்த தமிழ்ப்புலமை அருளி, நல்லொழுக்கம் தந்து, இப் பிறப்பில் வரும் அகப்பற்று புறப்பற்று என்னும் இருவகைத் துன்பங்களை நீக்கி, ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் ஒழித்து, தம் நலத்தை விடுத்து ஆராயும் பழைமையான திருவடியால் கூட்டத்துள் கூட்டி என்றும் ஒன்றியிருக்கும் பேரின்பப் பெரும்போகம் நுகரச் செய்து நின் சிவந்த மணமுடைய செந்தாமரை போன்ற திருவடிகளைக் காட்டி ஆட்கொண்டு அடியேனுக்கு முன்னின்று அருள் செய்வாயாக.

- சந்ததமும்

111. பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 112. பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடற் பூதமும்தீ நீரும் பொருபடையும் - தீதகலா

113. வெவ்விடமும் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம்வந் தெம்மை எதிர்ந்தாலும் -அவ்விடத்திற்

114. பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்

115. திருவரையும் சீறடியும் செங்கையும் ஈரா(று) அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்

(111-122)