உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் கலிவெண்பா

116. சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்

எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் 117. எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந் துல்லாச மாக உளத்திருந்து - பல்விதமாம் 118. ஆகமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப் பேசுமியல் பல்காப் பியத்ேெதாகையும் - ஓசை

119. எழுத்துமுத லாமைந் திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) - ஒழுக்கமுடன் 120. இம்மைப் பிறப்பில் இருவா தனையகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்(து}

121. ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய

122. கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்(டு) அடியேற்கு முன்னின் றருள்.

59

(கு - ரை) 117. சன்மப்பகை - பிறவியாகிய பகை; அவமிருந்து இடைக்காலச் சாவு; விக்கினம் -இடையூறு; பிணி நோய். 112 அடல் - வலிய; பொருபடை அழிக்கும்படை; தீது அகலா - தீமை நீங்காத. 113. வெவ்விடம் - கொடிய நச்சுயிர்கள்; 114. அயில்வேல் - கூர்மையான வேல்; 115. சீறடி - சிறிய அடி; மாமுகங்கள் - சிறந்த முகங்கள்; கிரணம் - ஒளி; 116. இடுக்கண் - துன்பம். 118. ஆசு உடனே பாடுதல்; மதுரம் - இனிமையாகப் பாடுதல்; சித்திரம் சித்திரத்தில் அடையுமாறு பாடுதல்; வித்தாரம் விரிந்த காவியம் பாடுதல் அட்டாவதானம்-ஒரே பொழுதில் எட்டு வேலைகளைத் தடுமாற்றமில்லாமல் செய்தல். 119. பாலித்து- தந்தருளி; 120. இருவாதனை - பெருந்துன்பம்; அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகைத் துன்பமுமாம் மோசித்து - நீக்கி. தம்மை - தம் நலத்தை. 121. ஆயும் ஆராயும்; தோயும் பொருந்தும்; பரபோகம் - பேரின்ப நுகர்வு, துய்த்தல் - நுகர்தல்; சேய சிவந்த. 122. கடி ஏற்கும் - மணம் கொண்ட; பூங்கமலம்- அழகிய தாமரை; கமலப்பூ என இயைப்பினும் ஆம்; அருள் - அருள் புரிவாயாக.

-

கந்தர் கலிவெண்பா

உரைநடையும் குறிப்பும் முற்றிற்று.

-