உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

“நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்ன நாள் ஏடாக மாமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணிதன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ” என்பார் வில்லிபுத்தூரார்.

-

யானை;

கோடு-கொம்பும், மலைமுகடும். வாரணம் யானைமுகக் கடவுளாம் மூத்தபிள்ளையாரைக் குறித்தது.

நால்வர் துணை கட்டளைக் கலித்துறை

“சைவத்தின் மேற்சம யம்வே றிலை, அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல்தெய்வம்இல்”லெனும் நான்மறைச் செம்பொருள்

மைவைத்த சீர்திருத் தேவார முந்திரு வாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாளெம் உயிர்த்துணையே.

வாய்

(பொ-ரை) "சைவ சமயத்தினும் மேம்பட்ட சமயம் பிறிதொன்று இல்லை; அச் சைவசமயம் சார்ந்த சிவம் ஆகிய தெய்வத்தினும் மேம்பட்ட தெய்வம் வேறொன்று இல்லை" என்று கூறும் நான்மறைகளின் செவ்விய பொருளைத் தம் மெய்ப்பொருளாகக் கொண்ட சிறந்த தெய்வத்தன்மை வாய்ந்த தேவாரத்தையும் திருவாசகத்தையும் உயிர்கள் கடைத்தேறும் வண்ணம் அருளிய சமயப் பெரியார் நால்வருடைய அழகிய திருவடிகள் எம் உயிர்க்கு உற்ற துணையாகும்.

(வி-ரை) தேவார திருவாசகங்கள் நான்மறைப் பொருளைத் தம்மகத்துக் கொண்டவை என்பதை "நான்மறைச் திருவாசகமும் என்றார்.நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்; முன்னவர் மூவரும் பாடியவை தேவாரத் திருப்பாடல்கள்; மாணிக்கவாசகர் அருளியது திருவாசகம்.

'சைவ எல்லப்பா நாவலர்' என்னும் ஆசிரியர் திருப்பெயரில் அமைந்துள்ள 'சைவ' என்னும் அடைச்சிறப்பிற்குச் சான்றாக அமைந்தது இப்பாடல். ஆசிரியர் அடியார்க்கு அடிமை பூண்ட திறமும் இதனால் விளங்கும்.