உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

1. இடர்க்கடல் புகுதாது எடுத்தருள்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் மாதவனும் அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே ஏனத்தின் வடிவாகி எகினத்தின் வடிவாகி அடிதேடி அறிவலென அவனியெலாம் முழுதிடந்தும் முடிதேடி வருவலென மூதண்ட மிசைப்பறந்தும் காணரிய ஒருபெருளாய்க் களங்கமற விளங்குபெருஞ் சோணகிரி எனநிறைந்த சுடரோளியாய் நின்றருள்வோய்! இஃது எட்டடித் தரவு.

மலைமிசையில் இருப்பதற்கோ மலைசிலையா எடுப்பதற்கோ மலையரையன் மகிழ்வதற்கோ மலையுருவம் எடுத்தனையே. இத்தலத்தில் ஐந்தொழிலும் இருபிறப்போர் அறுதொழிலும் தத்துவமும் திருமேனி தரித்திலையேல் இயலாவே.

இருக்காதி சதுர்வேதம் இசைப்பதுநின் பலபேதம் ஒருக்காலும் ஒன்றுரைத்த தொன்றுரைக்க அறியாதே.

கருமுடிவைத் தருகால கற்பமெலாம் கடக்கவுநின் திருமுடியிற் பிறைசிறிதும் தேயாது வளராதே.

தானவரைக் கடிந்துமலர்ச் சதுமுகனை ஒழித்துமற்றை வானவரை அழித்துநின்கை மழுப்படைவாய் மழுங்காதே. அண்டருக்கும் முனிவருக்கும் அழலான கொடுவிடத்தைக் கண்டமட்டு நுகர்ந்திடவும் கண்டமட்டிற் கடவாதே.