உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

மூவாமை தனக்குநின்றன் முதல்நடுஈ றிலாதமைக்கும் சாவாமை பிறவாமை தமக்குமிவை சான்றன்றே.

வை ஏழும் ஈரடித் தாழிசை.

தடவரை நடைகெழு தரமென வருமொரு கடகரி உரிவிரி கலையென மருவினை; படமுடை அரவொடு பகைபடு முடுபதி

தடையற வுடனுறை சடைநெடு முடியினை.

வை இரண்டும், நாற்சீர் ஓரடி இரண்டு கொண்ட அராகம்.

சிலையென மலையை வளைத்தனை;

திரிபுரம் எரிய நகைத்தனை;

கலைமறை இவுளி படைத்தனை

கதிரவன் எயிறு புடைத்தனை;

இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போ தரங்கம்.

விதிசி ரத்தினை;

அகழ்க ரத்தினை;

விடைந டத்தினை;

பொதுந டத்தினை;

நதித ரித்தனை;

மதிப ரித்தனை; நாள்க ளாயினை;

கோள்க ளாயினை.

வை எட்டும் இருசீர் ஓரடி அம்போ தரங்கம்.

பண்ணுநீ சுவையுநீ பரிதியுநீ பனிக்கதிர்நீ பெண்ணுநீ ஆணுநீ பேதமுநீ அபேதமுநீ.

செங்காலிற் கருங்காலன் சிரமுருள வுதைத்தனையே சங்காழி முகுந்தனுக்குச் சங்காழி கொடுத்தனையே. ஆராலும் அளவிடுதற் கரியவுனை ஒருகரத்து நீராலும் மலராலும் நெஞ்சுருகப் பணலாமே.

இவை மூன்றும் பெயர்த்தும் ஈரடித்தாழிசை.

என வாங்கு,