உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

67

இது தனிச் சொல்.

வேற்று மருந்தால் விடாதவெம் பிறவியை

மாற்று மருந்தா மலைமேல் மருந்தா அழகிய நாயகி அருளுடை நாயகி புழுகணி நாயகி பொருந்திய புனிதா காசியில் இறந்தும் கமலையில் பிறந்தும் தேசமர் தில்லையுள் திருநடம் கண்டும் அரிதினிற் பெறும்பே றனைத்தையும் ஒருகாற் கருதினர்க் கவிக்கும் கருணையை விரும்பி அடைக்கலம் புகுந்தனன் அடியேன் இடர்க்கடல் புகுதா தெடுத்தருள் எனவே. இது பத்தடி நேரிசை ஆசிரியச் சுரிதகம்.

“மணிகொண்... நின்றருள்வோய்"

(பொ-ரை) மணிகளைத் தன்னிடத்தே கொண்ட நீண்ட கடலில் அறிதுயில் கொள்ளும் திருமாலும், அழகமைந்த தாமரை மலரில் இருந்து நீங்காத நான்முகனும், அறிவாகிய கண்ணைக் கொண்டு அறியும் முறையை அறியாமல், முறையே பன்றியின் வடிவாகியும், அன்னத்தின் வடிவாகியும், 'திருவடியைத் தேடிக் காண்பேன்' என்று உலகம் எல்லாம் கொம்புகளால் தோண்டிச் சென்றும், 'திருமுடியைத் தேடிக் காண்பேன்' என்று பெருவானின் மேற் பறந்து சென்றும் காண்டற்கரிய ஒப்பற்ற பொருளாகத் தூய்மையாய் விளங்கும் பெரிய சோணகிரி என்னும் வடிவாய் நிறைந்த பேரொளியாக நின்று அருள் செய்பவனே! (யான் சொல்வதைக் கேட்டருள்வாயாக).

-

(வி-ரை) மாதவன் ஏனத்தின் வடிவாகி இடந்தும், சதுமுகன் எகினத்தின் வடிவாகிப் பறந்தும் என இயைத்துக் கொள்க. இது நிரல் நிறை அணியாகும். ஏனம் - பன்றி; எகினம் - அன்னம். அண்ணாமலை நெருங்குதற்கு அரிய மலை, என்னும் காரணத்தை விளக்கும் கதை இது. இக் கதை அருணாசல் புராணம் திருமலைச் சருக்கத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. (பொ-ரை) "மலைமிசையில்

கயிலாய மலையின்மேல் இருப்பதற்கோ, மேருமலையை மவான் மகிழ்

வில்லாக எடுப்பதற்கோ, மலையரசனாம் வடைதற்கோ நீ மலை வடிவம் எடுத்தாய்?

"இத்தலத்தில்"