உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்-38

இவ்வுலகில் ஐந்தொழில்களும், அந்தணர்களின் ஆறு தொழில்களும் தத்துவங்களை உணர்தலும் நீ ஒளிவடிவு கொள்ளாவிடில் நடைபெறா.

"இருக்காதி"

கு

இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான் வேதங்களும் இயம்புவது உன்னுடைய பல்வேறு வடிவங்களே. ஆனாலும் அவற்றுள் ஒன்று உரைத்த வடிவை மற்றொன்று உரைக்க அறியாது.

"கருமுடிவை”

உலக முடிவைத் தருகின்ற ஊழிகள் எல்லாம் சென்றாலும் உன்னுடைய திருமுடியில் உள்ள பிறை சிறிதும் தேயாது; வளரவும் செய்யாது!

66

'தானவரை"

அசுரரை அழித்தும், தாமரை மலரில் உறையும் நான்முகன் தலையைக் கிள்ளியும், மற்றைய தேவர்களைக் கொன்றும்,உன் கையிலுள்ள மழுப்படையின் கூர்மழுங்காது.

"அண்டருக்கும்

தேவருக்கும் முனிவருக்கும் அழிவு செய்யும் தீப்போன்ற கொடிய நஞ்சை நீ அளவின்றி உண்டும் அஃது உன் கழுத்தளவில் நின்றும் நீங்காது.

"மூவாமை"

உன்னுடைய மூப்பு இல்லாமைக்கும், முதல் நடு இறுதி இல்லாமைக்கும், இறவாமை பிறவாமை ஆகியவற்றுக்கும் மேலே கூறிய இவை சான்று ஆகும்.

(வி-ரை) மேரு மலையை வில்லாக எடுத்தது முப்புரங்களை அழித்தற்கு; இமவான் மகிழ்தல், தன் மகளாம் பார்வதியை மணந்தவன் சிவபெருமான் ஆகலின், இறைவன் ஐந்தொழில்கள்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. அந்தணர் அறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்பர்.

மழு எரி; இரும்புப்படை; மழுங்குதல் - கூர்; அற்றுப்போதல் 'கண்டமட்டில்' என்பதற்குப் 'பார்த்த அளவில்' என்றுமாம்.