உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தடவரை"

திருவருணைக் கலம்பகம்

69

பெரிய மலையானது நடையிட்டு வருகின்ற தன்மைபோல வந்த வலிய மதயானையினது தோலை விரிந்த போர்வையைப் போலப் போர்த்தாய்.

"படமுடை

15

அகன்ற படத்தையுடைய பாம்புடன் அதற்குப் பகையாக அமைந்த பிறைநிலா பகையற்று ஒருங்கு வாழ்கின்ற நெடிய சடைமுடியினை யுடையாய்.

"இறைவன் கரியுரி போர்த்தமை"

(வி-ரை) கயமுகாசூரன் விண்ணவரைத் துன்புறுத்துதலை அறிந்த சிவபெருமான், அவனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார் என்பது. உரி - தோல்; உரித்து எடுக்கப் பெற்றது என்னும் காரணப்பொருட்டு, உடுபதி - விண்மீன்களுக்குத் தலைவன்; என்றது திங்களை.

"சிலையென'

(பொ-ரை) வில் என்னுமாறு மேருமலையை வளைத்தாய். முப்புரங்களும் எரியுமாறு நகைத்தாய். கலைமலிந்த திருமறைகளைக் குதிரைகளாகக் கொண்டாய். கதிரோனின் பற்களை உடைத்தாய்.

(வி-ரை) முன்னே மூன்றும் முப் புரங்களை அழித்த காலத்தும், இறுதி ஒன்றும் தக்கன் வேள்விக் காலத்தும் நிகழ்ந்தனவாம்.

'விதி சிரத்தினை"

(பொ-ரை) நான்முகன் தலையைக் கிள்ளிய கையினை யுடையாய்; காளை ஊர்தியைச் செலுத்தினாய்; மன்றங்களில் நடஞ் செய்தாய்; கங்கையாற்றைச் சடையில் வைத்தாய்; பிறை மதியையும் சடையில் வைத்தாய்; நாள்கள் ஆயினாய். கோள்களும் ஆயினாய்.

(வி-ரை) பொது - அம்பலங்கள் அவை பொன், வெள்ளி, தாமிரம், சித்திரம், மணி என்பன முறையே சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம், திருவாலங்காடு என்பற்றிலுள்ள மன்றங்கள். நாள்கள் - விண்மீன்கள் ; கோள்கள் ஞாயிறு முதலிய ஒன்பது கோளங்கள்.

"பண்ணுநீ"

-